ஐ.எஸ்.அமைப்பிற்காக ஆயுதங்களை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஓர் ஆடவர் போலீசாரிடம் சரணடைந் துள்ளார். அவர் கடந்த மார்ச் மாதம் தாய் லாந்திற்கு தப்பியோடியவராவார். கிளந்தான், சிலாங்கூர், பேரா, கெடா ஆகிய மாநிலங்களில் மே 23 லிருந்து 26 வரையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின்போது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் அறுவர் போலீசாரால் கைது செய்யப்பட் டார். அந்த அறுவரில் ஒருவர் முகமட் முஸாபா அரீப் ஜுனாய்டி (வயது 27) ஒருவரா வார். புக்கிட் அமான் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நட வடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டார். முக மட் முஸாபா மே 23ஆம் தேதி கிளந்தான் ரந்தாவ் பாஞ்சாங்கில் போலீசாரிடம் சரணடைந்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபக் கார் கூறினார். அவர் இதற்கு முன்னர் மார்ச் 22ஆம் தேதி சுடும் ஆயுதங் களுடன் தாய்லாந்திற்குள் தப்பியோடியதாக ஐஜிபி கூறினார். இதைத் தொடர்ந்து அவரை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவியை போலீசார் நாடியதாக காலிட் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்