img
img

தமிழர் போற்றும் கலைஅடையாளமான பரத நிகழ்ச்சி சலங்கையின் சந்தம்
ஞாயிறு 28 மே 2017 13:24:39

img

கிள்ளான் பண்டார் புத்ரியில் அமைந்துள்ள அருள் நுண்கலைப் பள்ளியின் பரதநாட் டிய மாணவர்களின் சலங்கை பூஜை, சலங்கையின் சந்தம் எனும் பெயரில் டத்தின் ஸ்ரீ பிரேமா மணிமோகனின் தலைமையில் வரும் ஜூன் 3-ஆம் நாள், சனிக்கிழமை, மாலை 6.30 மணிக்கு, கிள்ளான் தெப்பி சுங்கை செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. மேற்பட்ட பள்ளியின் பரதநாட்டிய ஆசிரியர் நிருத்யாஞ்சலி திருமதி மோகனப் பிரியா கோவிந்தபிள்ளையின் நடனப் பயிற்சியின் கீழ் குமாரி சசிரேகா ராஜசோழன், செல்வி யோகதர்ஷினி, செல்வி ஜெய்ஸ்ரீ குணாளன், செல்வி சுவர்ண ஈஸ்வரி இருளையா, செல்வி சர்வினா தனேஷ்குமார், செல்வி கேசிகா பத்மநாதன் ஆகியோர் இந்தச் ‘சலங்கையின் சந்தம்’ நிகழ்வில் அறங்கேற விருக் கின்றனர். பின்னணி இசைக்கலைஞர்களாக, வாய்ப்பாட்டு-பள்ளியின் முதல்வர் திருமதி அல்லிமலர் மனோ கரன், நட்டுவாங் கம்- திருமதி மோகனப்பிரியா கோவிந்த பிள்ளை, வயலின்- இசைக்க லைமணி கார்த்திகேயன் கணபதி, மிருதங்கம் மற்றும் தபேலா- ஆசிரியர் சுநாதநந்தி, சிவகுமரேசன் இந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். தொடர்புக்கு: 012-6249469, 012-3115749.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img