மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகத் துறை வாய்ப்புகள் வலுவடைவதுடன் வர்த்தகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக மலேசிய அனைத்துலக வர்த்தக தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஓங் கா சுவான் தெரிவித்தார். ஆசியா நாடுகளில் தற்போது முதலீடு, வர்த்தகம், சுற்றுலா போன்ற துறைகள் துரித வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதிலும் இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் பல்வகை வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. இதனை மலேசிய வர்த்தகர்கள் முழுமையாக அறிந்து கொண்டு அனைத்துலக வியாபாரத் துறையில் மேலோங்க வேண்டுமென அண்மையில் தலை நகரிலுள்ள எஸ் டி ரேஜஸ் தங்கும் விடுதியில் நடைபெற்ற ஆசியான்- இந்தியா சிறந்த சாதனையாளர் விருந்து விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசினார். ஏஐபிசி எனப்படும் ஆசியான் இந்தியா வர்த்தக மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த விருது விழாவில் நம் நாட்டு பிர முகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் சிறந்த சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் இந்திய, தெற்காசிய நாடுகளுக்கான மலேசியாவின் சிறப்பு கட்டமைப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுக்கு சிறந்த சாதனை யாளருக்கான விருது வழங்கப்பட்டது. அதனை அடுத்து சிறந்த வர்த்தக நிறுவனத்திற்கான விருது உள்நாட்டு நிறுவனமான பிளாஸ் மெக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அந்நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ பிரகதீஸ் குமார் பெற்றுக் கொண்டார். இந்த விருது வழங்கும் விழாவில் மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் வர்த்தகத் துறையில் ஈடுபடும் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக மலேசியாவிற்கான இந்தியத் தூதர் டி.எஸ். திருமூர்த்தி கலந்து கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்