கோலாலம்பூர், மே 28-15 முறை சாம்பியன் பட்டம் வென்ற பென் அஸ்க் ரென்னுடன் மோதி வரலாற்றில் இடம் பிடித்தார் மலேசிய வீரர் அகிலன் தாணி.(Mixed Martial Arts) எனப்படும் கலப்பு தற் காப்புக் கலைப் போட்டியின் அனைத்துலக வெல்டர்வெயிட் சாம்பியன் பட்டத் திற்கான போட்டி நேற்று முன் தினம் சிங்கப்பூர் உள்ளரங்கில் நடை பெற்றது. செந்தூலைச் சேர்ந்த அகிலன் த/பெ தணிகாசலம் எனும் 22 வயது இளைஞர் முதல் முறையாக சிங்கப்பூரில் நடைபெற்ற வெட்ரல் வெயிட் ஓன் சாம் பியன் போட்டிக்கு முன்னேறினார்.இப்போட்டியில் 22 வயதான அகிலன் தாணி, 32 வயதான அமெரிக்காவின் பென் அஸ்க்ரென்னுடன் மோதினார். 15 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள பென் அஸ்க் ரென்னுக்கு மிகப் பெரிய சவாலாக அகிலன் தாணி விளங்கினார். போட்டி தொடங்கிய முதல் சுற்றில் கடுமையான போராட்டங்களை அகிலன் தாணி தோல்வி கண்டதுடன் பென் அஸ்க்ரென்னிடம் வெற்றியை பறி கொடுத்தார். 3 நிமிடங்களுக்குள் அகிலன் தாணி இப்போட்டியில் தோல்வி கண்டு விட்டார் என பல விமர்சனங்கள் சமூக வலலைத் தளங்களில் பரவி வருகிறது. தோல்வி கண்டாலும், அகிலன் தாணி இப்போட்டியில் களமிறங்கி விளையாடியது தான் சாதனை என்று பலர் அவருக்கு ஆதரவாக பேசி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சிங்கப்பூரை மையமாக கொண்டு செயல்படும் எம்எம்ஏ அமைப் பின் ஏற்பாட்டிலான ஒன் ஃபைட் போட் டிகளில் பங்கேற்ற அதே வேளையில் அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் தொடர்ந்து பயிற்சிகளையும் அவர் பெற்று வந்தார். இதுவரை அகிலன் 7 வெற்றிகளை நிலைநாட்டியுள்ளார். இதில் மூன்று நாக்-அவுட் வெற்றிகளாக அமைந்தது. ஆனால் பென் அஸ்க்ரென் 15 முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். அகிலன் தாணியை வீழ்த்தி 16ஆவது முறையாக வெற்றியை கைப்பற்றியுள்ளார்.கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியில் அகிலன் தாணியைக் காட்டிலும் அனு பவங்களும், ஆற்றலையும் அவர் அதிகம் கொண்டுள்ளார். இப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான் வீரரு டன் களமிறங்கி அவருக்கு சவாலான போட்டியை கொடுத்ததே அகிலன் தாணி யின் மிகப் பெரிய சாதனையாக உள் ளது. செந்தூல் என்ற பட்டணத்தில் இருந்து அனைத்துலக சாம்பியன் போட்டியில் களமிறங்கி பென் அஸ்க்ரென்னுக்கே சவால் கொடுத்து அகிலன் தாணி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே போட்டிக்கு பின் பென் அஸ்க்ரென் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அகிலன் தாணியின் முயற்சிகளை பாராட்டிய பென், அகில னுக்கு சிறு வயது தான். அவரும் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்