பொதுவான குப்பைகளுடன் மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களையும் சேர்த்து வைப்போருக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் வெ.250 அபராதம் விதிக் கப்படும் என பினாங்குத் தீவு நகராண்மைக் கழக (எம்பிபிபி)ச் செயலாளர், யூ துங் செங் கூறியுள்ளார். குப்பைகளை ஆரம்பம் முதலே பிரித்து வைக்கத் தவறுவதற்காகவே அந்த அபராதமாகும். அக்கொள்கையை மக்கள் ஒவ்வொருவரும் நன்றாகத் தெரிந்து கொள்வதற்கு ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டது. அக்காலகட்டம் முடிவடைகிற நிலையில் இனிமேல் பினாங்கை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் முறையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனவா எனும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர். குப்பைகளை குவித்து வைக்கும் இடங்களை அதிக காலத்திற்கு பயன்படுத்த ஏதுவாக பினாங்கில் கழிவுப் பொருட்களின் விழுக்காட்டை குறைக்க வேண் டியுள்ளது. இந்நிலையில் மக்கள் தேவையற்ற கழிவுப் பொருட்களை பிரித்து வைத்து எம்பிபிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு யூ கேட்டுக் கொண்டுள்ளார். குப்பைகளை பிரித்து வைக்கும் கொள்கையின்படி தரை வீடுகளில் வசிப்போர் பேப்பர், பிளாஸ்டிக், அலுமினிய டின்கள் போன்ற மறு சுழற்சி செய்யக் கூடிய பொருட்களை தங்களின் குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் வைக்க வேண்டும். அவற்றை நகராண்மைக் கழக லோரிகள் பெரு நிலப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை எடுத்துச் செல்லும்; தீவுப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சேகரித்துச் செல்லும். அடுக்கு மாடி வீடுகளில் வசிக்கின்றவர்களுக்கு கூட்டு மேலாண்மை அமைப்புக்ள அல்லது நிர்வாகக் கழகங்கள் குப்பை பிரிப்பு முறையைக் கையாளும் என்றார் யூ.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்