விஷம் கொண்ட அழகு சாதன பசைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக முடியலாம். இத்தகைய காரணத்தை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சின் மருந்தக முறைப்படுத்தும் இலாகாவானது ஏழு பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்டதில் பலவகை பசைகளும் அடங்கும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பொருட்களில் விஷம் இருப்பதை கண்டறியப் பட்ட பிறகு இப்பொருட்கள் சம்பந்தமான அறிவிப்புகள் உடனடியாக ரத்தாகியது. விஷம் கலந்த அழகு சாதன பசைகளால் தோலின் நிறம் பாதிப்புக்கு உள்ளாகலாம். தோலின் நிறம் மாறும். இறுதியில் இது தோல் புற்று நோய்க்கு இட்டுச் செல்லலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தோல் அரிப்பு போன்ற தொல்லைகள் ஏற்படும் சாத்தியமும் உண்டு. சம்பந்தப்பட்ட ஏழு அழகு சாதன பசைகளை விற்பனை யாளர்கள் விற்பனை செய் வதோ அல்லது விநியோகிஸ்தர்கள் விநியோகம் செய்வதோ உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். எவராவது இப்பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் 1984 மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனையினை எதிர்நோக்குவர். குற்றவாளிகளுக்கு 25,000 வெள்ளிக்கு மேல் அபராதம் விதிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனையும் உண்டு. அல்லது அபராத மும் சிறைத் தண்டனை யும் சேர்த்து வழங்கப்படும் என்று தலைமை இயக்குநர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்