2020ஆம் ஆண்டிற்குள் மலேசியாவை உயரிய நாடாக உருமாற்றம் செய்ய வேண் டும் எனும் துன் டாக்டர் மகாதீரின் கனவு நனவாவ தற்குள் மலேசியாவில் கட்டுப்பாடில் லாமல் அதிகரித்து வரும் மருந்துகளின் விலையும், மருத்துவ செலவினங்களும் மலேசிய மக்களிடையே எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தி வருவதை பினாங்கு மாநில நுகர்வோர் சங்கத்தின் (Penang Consumer Association-(AP) தலைவர் எஸ்.எம்.முகம்மது இட்ரிஸ் (S.M.Mohammad Idris) "High Medicine Prices are Killing Patients" (அதிகமான மருந்தின் விலைகள் நோயாளிகளைக் கொல்கின்றன) எனும் கட்டுரை தி மலேசியன் இன்சைடர் இணைய நாளேட்டில் வெளியானதை ஏவுகணை முழுமையாக ஆய்வு செய்கின்றது. உயரிய வருமானம் பெறுகின்ற இலக்கினை அடைய வேண்டிய மலேசியா அப்போதைய சூழலில் 2020ஆம் ஆண்டு லட்சியத்தினை எட்டிப் பிடிக்க முடியுமா என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் அன்றாட வாழ்க்கைச் செலவினம் கட்டுக் கடங்காமல் உயர்ந்து வரும் சூறாவளியில் சிக்கியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்பதாகவே ஏவுகணை கருதுகின்றது. * அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம்! * போக்குவரத்துச் செலவினங்களின் அழுத்தம்! * பொருள் சேவை வரியின் எதிர்மறையான தாக்கம்! * கட்டுப்பாடற்ற மருத்துவச் செலவினங்களின் உயர்வு! * வீட்டு வாடகை மற்றும் வட்டி விகிதத்தின் நிலைத்தன்மையற்ற சூழல்! * கண்காணிப்பே இல்லாத பொருட்களின் விலையேற்றம்! என மலேசியர்கள் அன்றாட வாழ்வியலில் பல்வேறு இன்னல்களை தினம் தினம் சந்தித்து வருவதை யாருமே மறுக்க முடியாது என்பதே 100% உண் மையாகும். கட்டுக்கடங்காமல் ஏறும் மருத்துவ செலவினம் பினாங்கு நுகர்வோர் சங்கத்தின் தலைவரான எஸ்.எம்.இட்ரிஸ் மலேசியர்களிடையே தடையில்லாமல் அதிகரித்து வரும் மருத்துவ செலவினங்கள் பற்றி குறிப்பிடுகையில்; 2010-இல் ரிம.1.61 பில்லியன் 2011-இல் ரிம. 1.76 பில்லியன் 2012-இல் ரிம.1.98 பில்லியன் 2013-இல் ரிம.2.20 பில்லியன் தொகையாக அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள நிலையில் மூன்றாண்டுகளில் ஏறக்குறைய 36.5% விலை உயர்வினைக் கண்டிருப்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை ஏற்பட்டுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ செலவினங்களின் உயர்வின் விழுக்காடு நிச்சயமாக 60%ட்டிற் கும் அதிகமாகவே இருக்க வேண்டும். மலேசியர்களைப் பொறுத்தவரையில் 79%ட்டு மக்கள் தங்களுடைய சொந்த சேமிப்புகளின் வழியே மருத்துவச் செலவினங்களைச் செய்து வருவதாக பாபர் (2003) எனும் ஆய்வாளர் தெளிவுபடுத்தி இருக்கும் நிலையில் கட்டுப்பாடற்ற நிலையிலும், அரசாங்கத்தின் தலையீடுகள் அறவே இல்லாத பட்சத்திலும், நோயாளிகளின் மருத்துவ - மருந்தக செலவினங்களைக் கட்ட முடியாத சூழலில் கடுமையான நோய்களைக் கொண்டிருக்கும் நோயாளிகள் மரணத்தின் வாசலை சந்திக்க வேண்டிய கொடூரமான சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ! எனும் அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ள எஸ்.எம்.முகம்மது இட்ரிஸின் கருத்தினை ஏவுகணை முழுமையாக ஆமோதிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவே இருக்கின்றது. விலையேற்றம்: இயற்கையா? செயற்கையா? கடந்த சில ஆண்டுகளாக மலேசியர்களின் வாழ்க்கைச் செலவினங்கள் கட்டுப்பாடற்ற நிலையில் உயர்ந்து வருவதற்கான தீர்வினை அரசாங்கம் இன்று வரை யோசிக்காத நிலையில் மனித வாழ்வியலுக்கு அத்தியாவசியமான மருந்துகள், மருத்துவ செலவினங்களின் உயர்வு மிகப் பெரிய சுமையினை மலேசியர்களுக்கு ஏற்படுத்தி வருவதை உணர்வதற்குக் கூட அரசாங்கத்திற்கு நேரமோ அல்லது வியூகமோ இல்லையா? எனக் கேட்பது நியாயமாகவே ஏவுகணைக்குத் தெரிகின்றது. மலேசியாவில் விலைவாசிகள் விஷம் போல ஏறி வருவதாகவே பொது மக்கள் பேசிக் கொள்வது யாருக்குமே கேட்காத நிலையில் மருந்துகளின் விலை உயர்வு இயற்கையானதா? அல்லது செயற்கையானதா? என்ற கேள்விக்கு எஸ்.எம்.முகம்மது இட்ரிஸ் பின்வரும் காரணங்களைப் பட்டியலிடுகின்றார். காரணம் 1: மருந்துகளின் பரிவர்த்தனையை 1994 இல் தனியார் மயப்படுத்தியதன் விலைவால் மருந்துகளின் விலை உயர்வு 3.3 மடங்குகளாக உயர்ந் துள்ளதை அறிய முடிகின்றது(Privatisation of Medicine Supplies) காரணம் 2: தனியார் மருந்தகம், மருத்துவ சேவை நிலையங்கள் விருப்பத்திற்கேற்றவாறு விலைகளை ஏற்றிய அவலத்தினால் பாபர் (2007) என்பவரின் ஆய்வின் படி மருந்துகளின் உண்மையான விலை 16 மடங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார் (High Mark-ups in the Private Sector) காரணம் 3: பொதுவான மருந்துகளின் (Generic Drugs) பயன்பாடு மிகவும் குறைவாகப் பயன்படுத்தும் (25% மட்டுமே) நிலையில் காப்புரிமை பெற்ற மருந்துகளின் (Patended Drugs) பயன்பாடு அதிகரிக்கப்பட்டு மருந்துகளின் விலை உயர்வடைந்தது! 2015 இல் மலேசிய சுகாதார அமைச்சு பரி வர்த்தனை செய்த மருந்துகளில் 50%ற்கும் குறைவாகவே பொதுவான மருந்துகள் இருந்துள்ளன. மேற்கண்ட காரணங்களின் வழியே மலேசியர்கள் மிக வும் அதிகமான விலை கொடுத்து மருந்துகளையும் மருத்துவ சேவைகளையும் பெற வேண்டிய சூழல் இருப்பதை அரசாங்கமோ அல்லது மலேசிய சுகா தார அமைச்சோ உணர்ந்துள்ளதா? என்பதை ஏவுகணை அறிய விரும்புகின்றது. மரணத்தின் வாயில்களில் நோயாளிகள் மலேசியாவின் 60 ஆண்டுகால சுதந்திரம் பல்வேறு உருமாற்றங்களை மலேசியர்களிடையே ஏற்படுத்தியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த 60 ஆண்டுகளின் நாட்டின் வளர்ச்சியோடு மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுள்ளதை மறுக்க முடியாவிட்டாலும் தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களோடு, மருத்துவச் செலவினங்களும் மக்களின் சுமையாக ஏற்பட்டிருக்கும் சூழலினால் கடு மையான நோய்களாகக் கருதப்படும் புற்றுநோய், இருதய நோய், இனிப்பு நீர்வியாதி, முதுகுத் தண்டு பிரச்சினைகள், சிறுநீரக நோய் போன்ற நோய் களால் அவதிப்படும் குறைந்த வருமானம் பெறுவோர் பொருளாதாரச் சிக்கல்களினால் மரணத்தின் விளிம்புகளில் நிற்கின்றனரா என்பதை நாளை ஆராய் வோம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்