பெட்டாலிங் ஜெயா மலேசிய இந்தியர் திட்ட வரைவு (எம்ஐபி), மிக வறுமையில் வாழும் இந்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவாது என்பதால் அது ஒரு தோல்வியான திட்டம் என்று மக்கள் பிரதிநிதிகள் இருவர் நேற்று கூறினர். எம்ஐபி அறிவிக்கப்பட்ட சுமார் ஒரு மாதத்தில் அவர்கள் இந்த கருத்தை வெளி யிட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜசெகவின் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோவும் பிகே ஆரின் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரும், உண்மையில் இந்தத் திட்டம் ஏழை மக்களை மேலும் ஓரங்கட்டுவதாக அமைகிறது என்று கூறினர். பி 40 பிரிவைச் சேர்ந்தவர்களை சமூக பொருளாதார நிலையில் எவ்வாறு உயர்த்துவது. அவர்களது சொத்துகளை எவ்வாறு பெருக்குவது என்பவை மீது திட்டவரைவு கவனம் செலுத்தவில்லை என்று சந்தியாகோ கூறினார். இந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் மாத வருமானம் 3,900 வெள்ளி அல்லது அதற்கும் குறைவு என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதில் இன்னும் மிக மோசமான நிலை என்ன வென்றால் இந்த திட்டவரைவு நடுத்தர, உயரடுக்கு இந்தியர்களுக்கு மட்டுமே வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது என்று அவர் மேலும் கூறினார். இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஒரு 10 ஆண்டு திட்டமான எம்ஐபியை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஏப்ரல் மாதம் அறிவித்தார். இந்த திட்டவரைவைப் பற்றி கருத்துரைத்த ஜெயக்குமார், நாடற்ற இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு பத்து ஆண்டுகள் தேவைப் படுவது ஏன் என்று வினவினார். மத்திய அரசாங்கத்தை எதிர்க் கட்சி கைப்பற்றினால் நாங்கள் இந்தப் பிரச்சினைக்கு ஆறு மாதங்களில் தீர்வு கண்டு விடு வோம் என்றும் அவர் குறிப்பிட்டார். திட்டவரைவு தொடர்பாக ஆலோசனைகள் திரட்டப்பட்டபோது எதிர்க் கட்சியினர் தவிர்க்கப்பட்டது ஏன் என்றும் அவர்கள் வினவினர். நாடாளு மன்றத் தில் தேசிய முன்னணியை விட எதிர்க்கட்சிகள் கூடுதலான இந்திய பிரதிநிதிகளை கொண்டிருப்பதால் எதிர்க்கட்சியினரின் கருத்துகளையும் அரசாங்கம் கேட்டிருக்க வேண்டும் என்று சந்தியாகோ கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்