img
img

மாணவர்களின் கல்வி உதவித் தொகையை குறைப்பதா?
சனி 27 மே 2017 13:21:24

img

காப்பாரில் உள்ள ஒரு கல்லூரிக்கு எதிராக இந்திய மாணவர்கள் செய்துள்ள போலீஸ் புகாரைத் தொடர்ந்து செடிக் எனப்படும் இந்திய சமூகப் பொரு ளாதார மேம்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று காலையில் அந்த கல்லூரியில் அதிரடி விசாரணையில் இறங்கினர். செடிக் பயிற்சித் திட் டத்தின் கீழ் அந்த கல்லூரி ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு வழங்க வேண்டிய 400 வெள்ளி அலவன்ஸ் தொகையை திடீரென்று பாதியாக குறைத்ததால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் அந்த கல்லூரிக்கு எதிராக நேற்று முன்தினம் காப்பார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அரசாங்கத்தின் இந்த இலவச தொழில் திறன் பயிற்சித் திட்டத்திற்கு ஒவ்வொரு மாதமும் 400 வெள்ளி படித் தொகை வழங்கப்படும் என்று அக்கல்லூரி உறுதி அளித்த பின்னர் திடீரென்று அந்த படித் தொகையை 200 வெள்ளியாக குறைத்துவிட்டதாகக் கூறி இந்திய மாணவர்கள் அந்த கல்லூரி நிர் வாகத்திற்கு எதிராக போலீஸ் புகார் செய்து இருந்தனர். இதன் தொடர்பில் தங்களின் செடிக் அதிகாரிகள் அந்த கல்லூரிக்கு சென்று அதிரடி நடவடிக் கையை மேற்கொண்டனர் என்று இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டப் பிரிவின் (செடிக்) பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ். ராஜேந்திரன் தெரிவித்தார். இதன் தொடர்பில் காப்பார் கல்லூரியில் தங்கள் அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- செடிக் மானியம் பெறும் கல்லூரி ஒன்று நடத்தி வரும் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் உரிமை பறிபோனதாக வெளி வந்த புகாரைத் தொடர்ந்து இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட் டுப் பிரிவு (செடிக்) அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. நேற்று காலை செடிக் அதிகாரி அக்கல்லூரிக்கு வருகை புரிந்து, அந்தக் கல்லூரி நடத்துநர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விசாரணை மேற்கொண்டார். செடிக் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குப் படித் தொகையாக மாதந்தோரும் வெ.400 வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகை மாணவர்களின் தங்கும் வசதி, உணவு மற்றும் கைச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த வசதிகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் கல்லூரிகள் ஒரு குறைந்த பட்ச கட்டணத்தைப் பிடித்தம் செய்வதற்கு அனுமதி உண்டு. ஆகவே, மாணவர்களுக்கு முறையே சேர வேண்டிய படித் தொகை அவர்களைச் சென்றடை வதைச் செடிக் உறுதி செய்யும். செடிக் - இன் அனுமதி இன்றி மேன்மிச்சமாக வழங்கப்படும் பிரத்தியேகத் திட்டங்களுக்கும் அதன் கட்டணமாகப் பிடித்தம் செய்யப்படும் வெ.200க்கும் செடிக் பொறுப்பேற்காது. எனினும், செடிக் அந்த கல்லூரி குறித்து முழுமையாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை களை எடுக்கும் என்று டத்தோ டாக்டர் என்.எஸ்.ராஜேந்திரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img