img
img

வெற்றி வாய்ப்பை இழந்தார் அகிலன் தாணி!
வெள்ளி 26 மே 2017 21:05:10

img

சிங்கப்பூர் அனைத்துலக வெல்டர்வெயிட் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் மலேசிய வீரர் அகிலன் தாணி வெற்றி வாய்ப்பை இழந்தார்.(Mixed Martial Arts) எனப்படும் கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியின் அனைத்துலக வெல்டர்வெயிட் சாம்பியன் பட் டத்திற்கான போட்டி இன்று சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்றது. செந்தூலைச் சேர்ந்த அகிலன் தாணி பல சிரமங்களுக்கு மத்தியில் இப்போட்டிக்கு முன்னேறினார்.இப்போட்டியில் 22 வயதான அகிலன் தாணி, 32 வய தான அமெரிக்காவின் பென் அஸ்க்ரென்னுடன் மோதினார்.15 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள பென் அஸ்க்ரென்னுக்கு மிகப் பெரிய சவாலாக அகிலன் தாணி விளங்கினார். இவ்வேளையில் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் அகிலன் தாணிக்கும், பென் அஸ்க்ரென்னுக்கும் கடுமையான போட்டி நிலவியது.இருந்த போதி லும் பென் அஸ்க்ரென்னின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத அகிலன் தாணி முதல் சுற்றிலேயே கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனிடையே அகிலன் தாணி மலேசியாவை தவிர்த்து பல நாடுகளில் நடைபெற்ற கலப்பு தற்காப்புக் கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு அதன் வழி கிடைத்த வெற்றிகளை தொடர்ந்து தற்போது அனைத்துலக வெல்டர்வெயிட் சாம்பியன் போட்டிக்கு முன்னேறியுள்ளார். சிங்கப்பூரை மையமாக கொண்டு செயல்படும் எம்எம்ஏ அமைப்பின் ஏற்பாட்டிலான ஒன் ஃபைட் போட்டிகளில் பங்கேற்ற அதேவேளையில் அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் தொடர்ந்து பயிற்சிகளையும் அவர் பெற்று வந்தார்.இதுவரை அகிலன் 7 வெற்றிகளை நிலைநாட்டியுள் ளார். இதில் மூன்று நாக்-அவுட் வெற்றிகளாக அமைந்தது. இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போனாலும் அகிலன் தாணிக்கு இதுவொரு சிறந்த அனுபவமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே போட்டிக்கு பின் பென் அஸ்க்ரென் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அகிலன் தாணியின் முயற்சிகளை பாராட்டிய பென், அகிலனுக்கு சிறு வயது தான். அவரும் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img