கோலாலம்பூர் நடப்பு இளையோர் நாடாளுமன்றம் ஆக மொத்தம் 138 பிரதிநிதிகளை கொண்டுள்ளது. இதில் தேர்தல் வழி தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய இளைஞர்கள் 12 பேர். நால்வர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடினால் நியமிக்கப் பட்டவர்கள்.இதில் ஒரே ஒரு இந்திய வீராங்கனையாக திகழ்பவர் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணவர்தினி. அனைத்துலக உறவுகளில் பட்டம் பெற்ற இவர் மகளிர் குறிப்பாக இந்திய மகளிர் எதிர்நோக்கும் சவால்களையும் சங் கடங்களையும் முன்னிலைப்படுத் துகிறார். அனைத்து துறைகளிலும் மகளிர் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது இவரின் தனியாத தாகமாகும். மலாக்காவைச் சேர்ந்த கபிலன், கோபிந் திரன், நெகிரி செம்பிலான் பார்த்திபன், பகாங் தேவின், பேரா ரவின்குமார், நந்தகுமார், கெடா செல்வகுமா ரன், சிலாங்கூர் கோபி, சிவநேசன், ஜொகூர் சிவபாலன், தென் முகிலன், யோகேஸ்வரன், பால கணேஷ், சிலாங்கூர் திவாகர், கோலாலம்பூர் நெடுநிலவன் ஆகியோர் இளையோர் நாடாளு மன்ற உறுப்பினர்களாக விளங்குகிறார்கள். இரண்டு நாள் நடை பெற்ற இந்த இளையோர் நாடா ளுமன்ற கூட்டத்திற்கு மக்களவை துணை சபாநாயகர் டத்தோ இஸ் மாயில் முகமது சைட் தலைமை தாங்கினார். இளையோர் நாடாளுமன்றத் தில் விவாதிக்கப்படும் விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு பிறகு மக்களவையின் பார்வைக்கு கொண்டு செல் லப்படும். அதன் பிறகு இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் முன்னிலையில் அமைச்சரவைக்குழுவின் பார் வைக்கு எடுத்துச் செல்லப்படும். இளையோர் மத்தியில் திவால் நடவடிக்கைகள் பெருகி வருவது கவலையளிக்கும் ஒன்று. நிதியினை சிக்கனமாக கையா ளும் கலையினை இளை யோர்களுக்கு சீராக சிறப்பாக கற்றுத்தர வேண்டும் என்று இளையோர் நாடாளுமன்றம் வேண்டுகோள் விடுக்கிறது. உள்ளாட்சி மன்றங்களில் இளைஞர்களுக்கு 35 விழுக்காடு கோட்டா தேவை என இளை யோர் நாடாளுமன்றம் வலி யுறுத்தியது. அடுத்தபடியாக மலே சிய ஊழல் தடுப்பு ஆணை யத்தின் தலைமை ஆணையர் டத்தோ ஸுல்கிப்ளி எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைக்கு இந்திய இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமோக ஆதரவினை தெரிவித்தனர். ஊழலை ஊதித் தள்ளுவோம் என்று இவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஒரு சேர முழங்கினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்