அந்நியச் செலாவணி முதலீட்டு மோசடி தொடர் பான விசாரணைக்காக குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் (பொக்கா) தடுத்து வைக்கப்பட்டிருந்த விஷ்ணு மூர்த்தி ராஜசிங்கம் 59 நாட்களுக்குப் பிறகு நேற்று விடுவிக்கப்பட்டார்.இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. அவரின் தடுப்புக் காவலை மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டிப்பதா, வீட்டுக்கட்டுப் பாட்டில் அவரை வைப் பதா, அல்லது அவரை விடுவிப்பதா என்ற விவ காரத்தில் குற்றத் தடுப்பு வாரியம் ஒரு முடிவை எடுக்கவில்லை என்று அரசு தரப்பு துணை வழக்கறிஞர் நபில்லா அஹ்மட் நீதிமன்றத்தில் கூறினார். ஆதலால், சட்டத்தின் கீழ் அவசியமாகும் வகையில், அடுத்த 59 நாட்களுக்கு விஷ்ணுவின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் அவரின் கணுக் காலில் மின்னியல் கண்காணிப்பு கருவியை பொருத்தும்படி செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஷம்சுடின் அப்துல்லா உத்தரவிட்டார். அந்த கருவியை அகற் றவோ அல்லது சேதப்படுத்தவோ கூடாது. அவ்வாறு நடந்தால் உங்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்று விஷ்ணுவை ஷம்சுடின் எச்சரித்தார். அது மட்டுமின்றி, வாரம் இரண்டு தினங்கள் (திங்கள், வியாழன்) போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் விஷ்ணுவிற்கு நீதிமன்றம் உத்தர விட்டது. ஃபோரெக்ஸ் முதலீட்டு திட்டம் தொடர்பான புலனாய்வுகளுக்காக கடந்த மே 29-ஆம் தேதி முதல் பொக்கா சட்டத்தின் கீழ் விஷ்ணு தடுத்து வைக்கப்பட்டு வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி மேலும் 38 நாட்களுக்கு அவரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டது. சுமார் 23,000 முதலீட்டாளர்கள் 8 கோடி வெள்ளி ஏமாற்றப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வீனஸ் எஃப் எக்ஸ் ஃபோரெக்ஸ் திட்ட மோசடி தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டிருப்பதாக புக்கிட் அமான் குற்றப்புலன் விசாரணை தலைவர் அக்ரில் சானி அப்துல்லா கடந்த மார்ச் 29-ஆம் தேதி ஓர் அறிக்கையில் கூறினார்.அறுவர் கைது செய்யப்பட்டு பொக்கா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு விற்பனை முகவரான விஷ்ணுவும் அவர்களில் ஒருவர். அந்த ஃபோரெக்ஸ் முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளர்கள் என நம்பப்படும் ஒரு டத்தோஸ்ரீக்கும் அவரின் மனைவிக்கும் எதிராக பல்வேறு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.இதனிடையே, தனது கணவர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் அது மகிழ்ச்சியான செய்தி அல்ல என்று விஷ்ணுவின் மனைவி ஏ.மகேஸ்வரி கூறினார். ஏழு மாத கர்ப்பிணியான மகேஸ்வரி நேற்று நீதிமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் பேசினார். அவர் ஜாமினில்தான் விடுவிக்கப்பட்டுள்ளார். அதிலும், கண்காணிப்பு கருவி அவரின் காலில் பொருத்தப்பட வேண்டியுள்ளது. கடந்த இரு மாதங்களாக அவரை ஏன் சித்தரவதை செய்தார்கள் என்று மகேஸ்வரி கேள்வி எழுப்பினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்