கோலாலம்பூர் பெர்னாமா தொலைக்காட்சியில் மீண்டும் தமிழ்ச்செய்தியை ஒளிபரப்புவதற்கு அந்நிறுவனம் பி.சேனால் நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெர்னாமா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டத்தோ ஸுல்கிப்ளி சாலேவும் பி.சேனல் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி சிவமணி சுப்பிரமணியமும் நேற்று கையெழுத்திட்டனர். இந்த அதிகாரப்பூர்வ நிகழ்வு மலேசிய தொலைத்தொடர்பு பல்முனை தகவல் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சைட் கெருவாக் முன்னிலை யில் நேற்று நடைபெற்றது. இன்னும் இரு மாத காலத்தில் பெர்னாமா தமிழ்ச் செய்தி ஆஸ்ட்ரோ 502 அலைவரிசையில் இரவு 7 மணிக்கு தொடங்கி அரைமணிநேரத்திற்கு ஒளிபரப்பப்படவுள்ளது. அதுமட்டுமின்றி பெர்னாமா செய்தி அலைவரிசையின் ஏற்பாட்டில் ஒரு மணி நேர தமிழ் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றையும் ஒளிபரப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கான ஒளிபரப்பு நேரம் கூடிய விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் இந்த திட்டமும் புரிந்துணர்வு ஒப்பந்த பாரத்தில் இடம் பெற் றுள்ளதாகவும் டத்தோ ஸுல்கிப்ளி சாலே நேற்று மாலை 4 மணியளவில் தலைநகரிலுள்ள சன்வே புத்ரா தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்த அதி காரப்பூர்வ நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த தமிழ் சிறப்பு நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் ஐப் டிவி 410, ஐப் டிவி 121, ஐடபள்யு ஜோய் ஆகிய அலவரிசைகளில் கண்டு களிப்பதுடன், www.bernama.com எனும் பெர்னாமா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் கண்டு மகிழ்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டு நடப்பு, பொருளாதார நிலை, அரசியல், விளையாட்டுத் துறை, அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் போன்ற அனைத்து அம்சங்களை இந்தியர்களும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள பெர்னாமா தமிழ் செய்தி வழிவகுக்கும் என அவர் உறுதியளித்தார். இதற்கிடையே பி.சேனல் நிறுவனத்தைச் சேர்ந்த சிவ மணி சுப்பிரமணியம் கூறுகையில், தமிழ்ச் செய்தியையும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்புவதற்கு தற்போது ஐந்து ஆண்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தொடர்ந்து பெர்னாமா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட பி.சேனல் நிறுவனம் தயாராக உள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்