காப்பார் கல்லூரி ஒன்று நடத்தி வரும் செடிக் பயிற்சி திட்டத்தில் தங்களின் உரிமை பறிபோனதாக பாதிக்கப்பட்ட ஏழை இந்திய மாணவர்கள் அக்கல்லூரிக்கு எதி ராக போலீசில் புகார் செய்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட வேண்டிய 400 வெள்ளி அலவன்ஸ் தொகை பாதியாக குறைக்கப்பட்டதால் அம்மாணவர்கள் பெரும் அவதிக்குள் ளானதாக தெரிய வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அம்மாணவர்களில் சிலர் இங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றுக்கு எதிராக காப்பார் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். செடிக் நிதித் திட்டத்தில் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய படித்தொகையை அக்கல்லூரி நிர்வாகம் பாதியாக குறைத்து விட்டதாக புஷ்பாதேவி நட ராஜன் (வயது 34), புகாரில் தெரிவித்துள்ளார். செடிக் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் மின்னியல் தொழில்திறன் பயிற்சிக்கு பதிவு செய்து கொண்டதாக காப்பார் தாமான் ஸ்ரீ கிராயோங்கைச் சேர்ந்த அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் இந்த இலவச தொழில்திறன் கல்வி பயிற்சி திட்டத்திற்கு ஒவ்வொரு மாதமும் 400 வெள்ளி படித்தொகை வழங்கப்படும் என்றும் அக் கல்லூரி நிர்வாகம் எங்களிடம் உறுதி அளித்தது. இருந்தும் கடந்த மாதம் எங்களிடம் படிவம் ஒன்றை காட்டி அதில் அவசர அவசரமாக கையொப்பம் வாங்கியது. அந்த படிவத்தை முழுமையாக தெரிந்துக் கொள்ளவும் அது எங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், இம்மாதம் எங்களுக்கு வழங் கப்பட்ட படித்தொகை பாதியாக குறைக்கப்பட்டது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்