நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜாயண்ட் மலேசியா (Giant Malaysia) முதல் முறையாக இணையத் தளம் வழி பொது உறவு தொடர்பு முறையை அதன் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. நோன்புப் பெருநாள் சிறப்பு விற்பனை பற்றிய விவரங்களை இது உடனுக்குடன் வாடிக்கையாளர் களுக்கு வழங்கும் என்று அதன் அறிக்கை கூறுகிறது. பெருநாள் காலத்தில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பெருநாள் ஏற்பாடுகளில் மூழ்கியிருக்கும் வேளையில், தங்கள் கைப்பேசியை பயன்படுத்தி இணையத்தளத்தை வலம் வருவதன் வழி ஜாயண்ட் வழங்கும் சலுகைகள், பொருள்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள முடியும். கமி செகெலுவார்கா கிலெமர்ராயா (Kami Sekeluarga GLAMORAYA) எனும் கருப்பொருளில் இணையத்தள இயக்கம் ஒன்றையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும். வாடிக்கையாளர்களை அணுகும் ஒரு புதிய வழிமுறையாக ஜாயண்ட் இவ்வியக்கத்தை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாண்டு அதன் 73-ஆவது நிறைவை கொண்டாடும் ஜாயண்ட் மலேசியா மக்களின் தினசரி தேவைகளுக்காக மலிவான, தரமான பொருள்களை விற்பனை செய்யும் ஒரு பிரபலமான பேரங்காடியாகத் திகழ்கின்றது. ஜாயண்ட் பற்றிய மேல் விவரங்களுக்கு http://www.giant.com.my அல்லது முகநூல் முகவரி www.facebook.com/giantmalaysia.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்