ஷா ஆலம் கிள்ளான், பூச்சோங் வட்டாரங்களில் கள்ள நோட்டு தயாரிக்கும் இரண்டு பெண்கள் உட்பட அறுவர் கொண்ட கும்பலை சிலாங்கூர் வர்த்தகக் குற்றவியல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த 23 ஆம் தேதியில் தென் கிள்ளான் போலீஸ் தலைமையக வர்த்தகக் குற்றவியல் தடுப்புப் பிரிவினர் கிள்ளான் புக்கிட் திங்கி பட்ஜட் தங்கும் விடு தியில் மேற்கொண்ட நடவடிக்கையில் இரண்டு மலாய் பெண்களையும் இரண்டு மலாய் ஆடவர்களையும் போலீசார் கைது செய்ததாக சிலாங்கூர் வர்த்த கக் குற்றவியல் பிரிவின் தலைவர் ஏசிபி வான் ருக்மான் வான் ஹசான் செய்தியாளர்களிடம் தெரிவித் தார். அவர்களிடமிருந்து 5 ஆயிரம் வெள்ளி கள்ள நோட்டுகளும் போலி நோட்டுகள் தயாரிக்கும் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார். இதனை தொடர்ந்து கிள்ளான் ஜாலான் கெபுன், சமாரிண்டா பகுதியில் இதே நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு ஆடவர் கைதாகி அவரிடமும் போலி நோட் டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஏசிபி வான் ருக்மான் தெரிவித்தார். மூன்றாவது நடவடிக்கையில் பூச்சோங் பகுதியிலும் ஒரு சீன ஆடவர் கள்ள நோட் டுடன் கைதானதாக அவர் சொன்னார். மேற்கூறப்பட்ட மூன்று கைது நடவடிக்கைகளிலும் கள்ள நோட்டுகளும் தயாரிப்பு கருவி களும் பறிமுதல் செய்யப்பட் டதாக அவர் தெரிவித்தார். 30 முதல் 40 வயதிலான இக்கும்பல் கடந்த 2016 இல் இருந்து இச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்