img
img

இந்துக்களின் ஈமச்சடங்குகளுக்கு தனியிடத்தை சட்ட பூர்வமாக ஒதுக்குவீர்!
வியாழன் 25 மே 2017 12:34:29

img

இயற்கை எய்தியவர்களைப் பிரிந்து அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்ப உறவுகள் ஈமச் சடங்குகளை செய்வதற்கு கடற்கரைகளுக்குச் செல் லும் வேளையில் அங்கு பல்வேறு விதமான அசௌ கரியங்களும் பாதுகாப்பற்ற சூழ் நிலைக்கும் ஆளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக ஈமச் சடங்குகள் செய்யும் பகுதி தனியாருக்கு அல்லது அரசாங்கத்தின் மேற்பார்வையில் உள்ள பகுதிகளாக இருந்து வருகின்றன. இதன் காரண மாக அதிகாலையில் அங்கு செல்லும் இந்துக்கள் ஈமச் சடங்குகள் செய்யும் பகுதியை பராமரித்து வருவோர் அல்லது அந்நிலப் பகுதிக்கு உரியவர்கள் மூலமாக பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழாமல் இருக்க வேண்டுமெனில் ஈமச் சடங்குகள் செய்வதற்கென அதிகாரப்பூர்வமான நிலப் பகுதியொன்று அரசாங்கத்தால் ஒதுக்கப்பட வேண்டும் என்பதுடன் அந்நிலப் பகுதியை அரசுடைமையாக அவசியம் பதிவு செய்திடல் வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சிலாங்கூர், பேரா, நெகிரி செம்பிலான், பகாங், மலாக்கா, பினாங்கு, கெடா, ஜொகூர் போன்ற மாநிலங்களில் இத்தகைய பிரச்சினைகள் இருந்த வண்ணம் உள்ளன. சிலாங்கூர் மாநிலத்தில் பிரதான ஈமச்சடங்கு செய்யும் இடமாக மோரிப் கடற்கரை திகழ்கிறது. மோரிப் கஞ்சோங் லாவுட் எனும் பகுதியில் கடற் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஈமச் சடங்குகள் செய்யும் பகுதியானது தற்காலிக இடமாகவே இருந்து வருகிறது. மோரிப் கடற்கரையின் ஒரு பகுதி, ஈமச்சடங்கு செய்வதற்கு தனியிடமாக ஒதுக்கித் தரப்பட்ட வேண்டும். அது அரசு பதிவேட்டில் இடம் பெற வேண்டும் என்பது சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்து மறைந்த டத்தோ த.ம.துரை காலத்திலிருந்து வட்டார மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அந்தப் பகுதியை அரசு பதிவேட்டில் இடம் பெற வேண்டிய திட்டம் இன்று வரை கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது என்கின்றனர் உள்ளுர் மக்கள்.அந்த குறிப்பிட்ட கடற்பகுதியை அரசு பதிவேட்டில் இடம்பெறச் செய்தால் தங்களின் பராமரிப்பின் கீழ் வைத்துள்ள கோலலங்காட் இந்து இளைஞர் இயக்கத்தினர், சிலாங்கூர் மாநிலம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்து ஈமச் சடங்குகளை செய்வதற்காக இங்கு வருவோருக்கு மேலும் நேர்த் தியான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்ப தற்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும். அத்துடன் அதிகாலையில் இதுபோன்ற சடங்குகளை செய்வதற்கு வருகின்றவர் களுக்கு பல்வேறு தரப்பினரால் கொடுக்கப் படும் தொல்லைகளும் தவிர்க்க முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இந்துக்கள் ஈமச் சடங்குகள் செய்வதற்கான அதிகாரப்பூர்வமான பகுதியை அரசாங்கம் ஏற்படுத்துவதோடு அவற்றை அரசு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டுமென சிலாங்கூர் மாநில அர்ச்சகர் சங்கத்தின் தலைவரும் ஜெஞ்சாரோம் ஆலய குருக்களான சிவஸ்ரீ மு.ப கணேச குருக்கள் மற்றும் கோலலங்காட் மற்றும் சிப்பாங் வட்டாரங்களைச் சேர்ந்த ஆலய குருக்களான சிவச்சாரியார் ம.குணசீலன் குருக்கள், ஸ்ரீபெருமாள் ஆலயம் சிம்பாங் மோரிப்,பந்திங்கைச் சேர்ந்த சுரேஷ் குருக்கள், சிப்பாங் டிங்கில் சிவகாளியம்மன் ஆலய குருக்கள் சிவா, தங்களின் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் மலேசிய நண்பன் நாளேட்டின் மூலமாக தெரிவித்துக்கொள்வதாக கூறினர். இறந்தவர்களின் ஈமச்சடங்கு காரியங்களை செய்வதற்கு அரசாங்கமே பொறுப்பேற்று அதற்கான இடத்தையும் நிலத்தையும் ஒதுக்கித் தர வேண்டும் என்று நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலங்களின் குருக்கள் கேட்டுக்கொண்டனர். இந்து சமயத்தை சேர்ந்தவர்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர்களுக்கான ஈமக் காரியங்களை கடற்கரையில் முறையாக செய்ய வேண்டிய சடங்குகள் இப்பதால் அவற்றை ஒழுங்குபடுத்தி செய்வதற்கு தனியிடம் அவசியமாகிறது என்று நெகிரி செம்பிலான், மலாக்கா மாநில அர்ச்சகர்கள் சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீ டாக்டர் கே.எல். ஆனந்தகோபி சிவாச்சாரியார் வலியுறுத்தினார். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போர்ட்டிக்சனை தவிர மற்ற மாவட்டங்களில் கருமக்கிரியை ஈமச் சடங்குகள் செய்வதற்கு இடம் ஒதுக்கப்படாமல் இருப்பது ஒரு குறையாகவே இந்துக்களிடம் இருந்து வருவதாக சிரம்பான் ஜெயா வட்டார இந்து சங்க பேரவை தலைவர் எம்.கே. ஜெயராமன் குறிப் பிட்டார். நாடு சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலங்களில் நாடு முழுவதுமுள்ள ஊராட்சி மன்றங்களின் பார்வையில் மின்சுடலைகள் நிர்வகிக்கப்பட்டதுடன் ஈமச் சடங்கு செய்வதற்கும் தனியிடம் இருந்த காலம் மாறி தற்போது இடம் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சிரம்பான் வட்டார இந்து சங்க பேரவை யின் தலைவர் வே. முருகையா தெரிவித்தார். கண்ட இடங்களில் ஈமச் சடங்குகள் செய்வதை குறை சொல்லிக்கொண்டிருக்காமல் இந்துக்களின் ஈமச்சடங்கு காரியங்களை செய்வதற்கு கடற்கரை அல்லது ஆற்றங்கரை யோரங்களில் பிரத்தியேகமாக இடத்தை அரசாங்கமே ஒதுக்கீடு செய்து அதனை அரசு பதிவேட்டில் கையகப்படுத்த வேண்டும் என்று பண்டார் ஸ்ரீ செண்டையான் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய தலைவர் வே. மணிமாறன் கேட்டுக்கொண்டார். ஈமச்சடங்கு செய்வதற்கு மாநிலத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள் தனி குழு அமைத்து செயல்படுத்த முன் வந்தால் இந்து சங்கம், ஆலயங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கும என்று மாநில இந்து சங்க பேரவையின் பொருளாளர் சுகுமாறன் குறிப்பிட்டார். ஜொகூர் மாநிலத்தில் இந்துக்களுக்கு நீண்ட காலமாகவே ஒரு பிரச்சினை இருந்து வரும் ஈமக்காரியங்களுக்கான இடம் இன்னும் இழுபறியாக இருந்து வருகிறது. இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜொகூர் மாநிலத்தை சேர்ந்த குருக்கள்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஈமக்காரிய சடங்குகளை செய்வதற்கு மக்கள் பெரும்பாலும் கடற்கரையை நோக்கி வரும் போது மாநகர மன்ற அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர் கொள்ளாமல் இருக்க அதிகாலையிலேயே கடற்கரைக்குச் செல்ல வேண்டியுள்ளதாக ஜொகூர் மாநில இந்து அர்ச்சகர் சங்கத்தின் தலைவர் ஆர். குஞ்சிக் கண்ணன் குருக்கள் தெரிவித்தார். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கூலாய், தான் யோக் போங் அருள்மிகு மகாமாரியம்மன் ஆலய குருக்களுமான ஆர். குஞ்சிக் கண்ணன் குருக்கள் குறிப்பிட்டார். ஜொகூர் பாரு வட்டாரமின்றி, ஸ்கூடாய், கூலாய், பாசிர் கூடாங், உலுதிராம் போன்ற இடங்களில் வாழும் இந்துக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் இறை வனடி சேரும் போது அவர்களுக்கான இறுதிச்சடங்கு செய்வதில் பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளாத போதும் கடற்கரையோரங்களில் ஈமக் காரியங்களை செய்வதற்கான நிரந்தர இடமில்லாமல் அவதிப்படுவது ஒரு வருத்தமான விஷயம் என சிவஸ்ரீ சு.ப. முருகையா குருக்கள் குறிப்பிட்டார். அதனை விரைவில் சரிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார். சுற்றுவட்டாரத்தில் இந்துக்கள் எவராவது மரண மடைந்தால் அவர்களுக்காக ஈமக்காரியங்களை செய்வதற்கு தற்போது சட்டவிரோதமாக டாங்கா பே கடற்கரையை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளதாக சினாய் தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய குருக்கள் சிவஸ்ரீ கே.எஸ். விஷ்ணு குருக்கள் தெரிவித்தார். டங்கா பேயில் ஈமக் காரியங்கள் செய்வதற்காக படகில் ஏறிச் சென்று படகு கவிழ்ந்த சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். நிரந்தர இடம்தான் இதற்கு சரியான தீர்வு என்று அவர் வாதிடுகிறார். கோத்தாதிங்கி வட்டாரத்தில் எவராவது இறக்க நேரிட்டால் அவர்களை அடக்கம் செய்வதற்கு அல்லது எரிப்பதற்கு கூலாய் அல்லது சுங்கை திராம் செல்ல வேண்டியிருப்பதாக குறிப்பிட்ட பெல்டாலிங்கியூ ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய குருக்கள் பி. சா. சாரங்கபாணி, ஈமக்காரியங்களுகாக சுங்கை ரெங் கிட் கடற்கரை, சுங்கை பாப்பான் கடற்கரை அல்லது கோத்தா திங்கி ஆற்றுப்பகுதியை நாட வேண்டியிருப்பதாக குறிப்பிட்டார். இவை எதுவுமே அதி காரப்பூர்வமான இடமல்ல என குறிப்பிட்ட சாரங்கபாணி, இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். ஜொகூர் மாநிலத்தில் அனைத்து இடங்களிலும் இந்துக்களுக்கான ஈமக்காரியங்கள் செய்வதற்கு தனியிடத்தை மாநில அரசாங்கம் ஒதுக்கித் தந்து அது அரசு பதிவேட்டில் இடம் பெற்றால் மட்டுமே இந்தப்பிரச்சினைக்கு தீர்வு என்று பாலோ சக்திவேல் முருகன் ஆலய குருக்கள் சிவஸ்ரீ ரெ. ஆறுமுகம் கேட்டுக்கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img