img
img

குற்றமற்ற எங்களை போலீசார் அடித்து துன்புறுத்துவதா?
வியாழன் 25 மே 2017 12:04:45

img

ஈப்போ இம்மாதம் 18ஆம் தேதி பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் சுங்கை சிப்புட் கம்போங் இராமசாமியிலுள்ள தன்னுடைய வீட்டில் அன்னையர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று வீட்டினுள் நுழைந்த போலீசார் தன்னையும் தன் தம்பி மற்றும் ஆறு நண்பர்களையும் கைது செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான பட்டதாரி சு.அஷ்வேந்திரன் (வயது 25) நேற்று இங்குள்ள பேரா மாநில ஜசெக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். சுங்கை சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.சிவநேசன், அஷ்வேந்திரனின் தந்தை சுப்பிரமணியம், ஜாலோங் சட்டமன்ற உறுப்பினர் லோ பாதிக்கப்பட்ட எஸ்.பிரசாந்திரன், பி.ரவிக்குமார், எம்.சரண், ஜி.அவினேஷ் ஆகியோரும் உடனிருந்தனர். கைது செய்வதற்கான காரணத்தைக் கேட்டபோது கம்போங் ராப்பாட் செவன் இலவன் கடையில் நடைபெற்ற திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்வதாக அவர்கள் தெரிவித்ததாக அஷ்வேந்திரன் கூறினார். பிறகு தன்னைத் தனியாக அங்கிருந்த போலீஸ் காருக்குள் அழைத்துச் சென்று குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி துப்பாக்கியைக் காட்டி போலீஸ்காரர் ஒருவர் பயமுறுத்தினார். நான் ஒப்புக் கொள்ள மறுத்தவுடன் அந்தக் காரில் ஏற்றி என்னை நானிருக்கும் வீடமைப்புப் பகுதியைச் சுற்றி வலம் வந்து என்னை அவமானப்படுத்தினார்கள். பிறகு எங்கள் ஏழு பேரையும் எங்களுடைய இரண்டு டொயோட்டா வியோஸ் ரகக் கார்களையும் பறிமுதல் செய்து ஈப்போ காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள போலீஸ் லாக்கப்பில் வைத்து என்னையும் என் நண்பர்களையும் அடித்துத் துன்புறுத்தினர் என்றும் அஷ்வேந்திரன் கூறினார். மறுநாள் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று தடுப்புக் காவலை நீட்டிக்க அனுமதி கேட்டனர். பிறகு அன்று மாலையில் எங்களை அடையாளம் காட்டும் அணிவகுப்பில் நிறுத்தினர்.எனினும் நாங்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று தெரிந்தவுடன் பிற்பகலில் எங்களை விடுதலை செய் ததோடு எங்கள் கார்களையும் திருப்பித் தந்தனர். எவ்விதமான குற்றச் செயல் பதிவுகள் இல்லாத எங்களை கைதுசெய்து அடித்துத் துன்புறுத்தி அவமானப்படுத்தியது தாங்க முடியாத வேதனையாக உள்ளதென்று தளுதளுத்த குரலில் அஷ்வேந்திரன் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img