ஆயர்கூனிங் போலீசாரால் தீவிரமாக தேடப் பட்டவன் என்று நம்பப்படும் இந்திய கொள்ளைக் கும்பல் தலைவனும் கனரக இயந்திரங்களை கொள்ளையடிக்கும் நப ருமான 40 வயது ஆடவன் ஒருவனை போலீசார் நேற்று சுட்டுக் கொன்றனர். நேற்று மாலை 3.30 மணியளவில் இங்கு ஜாலான் ஆயர் கூனிங்-கம் போங் காஜா சாலையில் அவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தாப்பா, முவாலிம், ஆயர் தாவார் மற்றும் மஞ்சோங் மாவட்டங்களில் கனரக இயந்திரங்களை கொள் ளையிட்டு வந்தவன் இவன் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹஸ்னான் ஹசான் தெரிவித்தார். கடந்த 2003 முதல் 2013 வரை இவனுக்கு 7 குற்றச் செயல் பதிவுகள் உள்ளன. கொலை செய்ததற்காக ஜொகூர், சிம்பாங் ரெங்காம் சிறைச்சாலையில் முன்பு தடுத்து வைக்கப்பட்டான். சிலாங்கூர், ஜொகூர் மற்றும் பேராவில் கொள்ளைக் கும்பலின் தலைவனாகவும் இவன் செயல்பட்டு வந்துள்ளான். ஹோண்டா சிட்டி காரில் சென்று கொண்டிருந்த அவன், சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டதை தொடர்ந்து ரோந்து போலீசார் கண்டனர். அந்த கார் கோலாலம்பூரில் காணாமல் போனதாக பதிவு உள்ளது. காரை நிறுத்தும்படி போலீசார் அவனை எச்சரித்து இருக்கின்றனர். ஆனால்,அவன் ஜாலான் ஆயர்கூனிங் - கம்போங் காஜா சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் காரை நிறுத்தாமல் சென்றுள்ளான். அவன் போலீஸ் காரை நோக்கி மூன்று முறை சுட்டான். போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தியதில் அவன் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான் என்று டத்தோ ஹஸ்னான் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்