பூச்சோங் மக்களுக்கு சேவையாற்றும் மனபான்மை யுடன் அரசு சாரா இயக்கங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு இயக்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ கமலகண்ணன் நேற்று கூறினார். இந்திய சமுகத்தை பிரதிநிதித்து நாட்டில் ஆயிரக்கணக்கான அரசு சாரா இயக்கங்கள் தொடங்கப்பட் டுள்ளன. இதில் குறிப்பிட்ட சில சங்கம் மட்டுமே எந்தவொரு பலனும் இன்றி மக்களுக்கான சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இயக்கங்கள் தங்களின் சுயநலத்திற் காக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒரு சில இயக்கங்கள் தொடங்கப்பட்டு அரசாங்க ரீதியில் நிதிகளை பெற்று நாளடைவில் காணாமல் போய்விடுகின்றன. இந்திய சமுதாயத்திற்காக ஆயிரக்கணக்கான சங்கங்கள் தொடங்கப்படுவது வரவேற்கக் கூடிய விஷயம் தான். ஆனால் இச்சங்கங்கள் மக்களுக்கு சேவையாற்றும் மனபான்மையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் குறிப் பிட்டார். அன்னையர் தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு இயக்கத்தின் சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ ரவீன் ஏற்பாட்டில் ரத்த தான நிகழ்வு பூச் சோங்கில் நடைபெற்றது. ரத்த தானத்துடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், கண் பரிசோதனைகளும் இலவசமாக வழங்கப்பட்டது. இதை தவிர்த்து உடல் உறுப்பு தான மையங்களும் திறக்கப்பட்டு அதில் பலர் தங்களின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். காப்புறுதி நிறுவனங்களின் முகாம்களும் அமைக்கப்பட்டு அதன்வழி விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டி களும் நடத்தப்படன. தேசிய ஒருமைப்பாடு இயக்கத்தின் பல்லின மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இம்மக்கள் பயன் பெறும் வகையில் இந்த ரத்த தான நிகழ்வுகள் நடத்தப்பட்டது. அதேவேளையில் பூச்சோங் வட்டாரத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவன குறைவாக இருக்கும் மக்களும் இலவசமாக மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர். இதுபோன்ற நிகழ்வுகள் சிலாங்கூர் மாநிலத்தில் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று டத்தோ ரவின் செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்