அன்னைக்கும் மேலான உறவு உலகில் எதுவுமில்லை. அன்பு, பாசம், கருணை, ஆறுதல் என அனைத்து உருவிலும் அன்னை இருக்கிறார். அப்படிப்பட்ட அன்னைக்கு புகழாரம் சூட்ட செலேசா ஜெயா, ஷெரன் முதியோர் இல்லத்தில் அன்னையர் தின விழா கொண்டாடப்பட்டது. அங்கு இருக்கும் அன்னையருக்கு பாசத்தை காட்டி கவலைகளைப் போக்கி மகிழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. இந்த பாசமிகு விழாவில் மலேசிய இந்து சங்கம் ஜொகூர் மாநிலத் தலைவி விவேகநாயகி, திருமதி அன்புக்கரசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேரவை அடிக்கடி நிகழ்வுகள் படைத்து உயிர்ப் புடன் செயல்படு வதாக பாராட்டினார். முன்னதாக செயலாளர் மோக னதாஸ் முனியாண்டி வரவேற்புரை ஆற்றினார். தலைவர் க.சேகரன் தலைமையுரை ஆற்றினார். இந்நிகழ்வில் 48 வயது திருமதி பொன்னி சமீபத்தில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு மலேசிய இந்து சங்கம் மற்றும் பக்திஜெயா உதவியை நாடினார். அவருக்கு மலேசிய இந்து சங்கத் தலைவர் க.சேகரன், பக்திஜெயா சமூகநல இயக்கத் துணைத்தலைவர் டத்தோ சின்னசாமி இரு இயக்கங்களின் சார்பாக வெ.1500 வழங்கி அவருக்கு கட்டில், சக்கர நாற்காலி வாங்க உதவி செய்தனர். பாடகர்கள்bசிவக்குமார், இராஜேஸ்வரி இன்னிசையுடன் பாடல்கள் வழங்க நிகழ்வு நிறை வுற்றது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்