சுங்கைப்பட்டாணி நாட்டின் 14 வது பொதுத்தேர்த லில் கெடா மாநிலம் தேசிய முன்னணி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் கெடா மாநிலத்திற்கு தைப்பூச பொது விடுமுறை நிச்சயம் என்று கெடாமாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமாட் பாஷா கூறினார்.தேர்தலுக்காக இதை கூறவில்லை. தேசியமுன்னணி வெற்றி பெற்றால் நிச்சயமாக கெடா மாநிலத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படும் என்று அவர் சொன்னார். இது தேர்தல் காலமாக இருப் பதால் பலர் வந்து இந்தியர்களை சந்திப்பர். அப்போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்குவர். அதனை இந்தியர்கள் நம்பக் கூடாது என்று மந்திரி புசார் இந்தியர்களை கேட்டுக் கொண்டார். தேசிய முன்னணி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் கூட்டணி கட்சி. மக்க ளுக்கு முன்னுரிமை என்ற கோட் பாட்டை கடைபிடித்துவரும் கட்சி தேசிய முன்னணி கட்சி என்று அவர் இங்கு கூறினார். கெடா மாநில ம.இ.கா. ஏற்பாடு செய்திருந்த ஒற்றுமை பண்பாட்டு விழாவை தொடக்கி வைத்து பேசிய போது மந்திரி புசார் இதனை அறிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விழாக்கால விடுமுறை கெடா மாநில தைப்பூச விழாவிற்கு வழங்கப்பட்டது. இந்த விடு முறையை ஏற்கெனவே சுங்கைப் பட்டாணி தைப்பூச விழாவிற்கு வருகை தந்தபோது பிரதமர் கெடா மாநில தைப்பூசத்திற்கு பொது விடுமுறைவழங்கப்படும் என்று அறிவித்தார். இம்முறை வழங்கப்படும் விடுமுறை அரசாங்க பொது விடுமுறை என்று அவர் தெளிவு படுத்தினார். இந்தியர்களின் கோரிக்கைகள் நியாயமான கோரிக் கைகளாகும். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பல சாதனைகளை படைக்கலாம் என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்