ஜெரம் தோட்டத் தொழிலாளர்களின் சொந்த வீட்டுடைமைத்திட்டம் மண்மூடிப்போனதற்கு தோட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் தொழிலாளர் நலன் மீது அக்கறை கொண்டிருக்காததுமே முக்கிய காரணமாகும் என்று தோட்ட முன்னாள் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தொழிலாளர்கள் வீட்டுடை மைத் திட்டத்திற்கு கத்ரி நிறுவனம் மறுப்பு தெரிவித்ததால் எங்களுடைய அந்த நீண்ட நாள் கனவு கலைந்து போனது என்று இங்குள்ள புக்கிட் செராக்கா தோட்ட முன்னாள் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர். தொழிலாளர்கள் சொந்த வீட்டுடைமைத் திட்டத்திற்கு சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான நிலம் ஒதுக்கும்படி நாங்கள் கோரிக்கை விடுத்தோம் என்று அத் தோட்டத் தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் வேலாயுதம் பெரி யண்ணன் கூறினார். ஆனால், கத்ரி நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக அவர் குறிப் பிட்டார். இதனால், தொழிலாளர்களின் அந்த நீண்ட நாள் கனவு கலைந்து போனது என்று வேலாயுதம், ஏமாற்றம் தெரிவித்தார். அவ்வீட்டுடைமைத் திட்டத்தில் சுமார் 150 தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித் தரும்படி தோட்டத் தொழிற் சங்கம், பரிந்துரைத்த தாகவும் அவர் சொன்னார். 1994ஆம் ஆண்டு தொழிலா ளர்களின் இந்த கோரிக்கை தொடர்பாக புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற சந்திப்புக் கூட்ட மொன்றில் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் கலந்து கொண்டார். தோட்டத் தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் அப் போதைய ஆட்சிக் குழு உறுப்பினரும் தோட்டத் தொழிலாளர் நலன் குழுவின் தலைவருமான எஸ்.எஸ்.இராஜகோபால், ஜெரம் சட்டமன்ற தொகுதியின் அப்போதைய உறுப்பினர் புவான் ஹஜ்ஜா மெஸ்ரா, தோட்ட நிர்வாகிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால், நாங்கள் முன் வைத்த கோரிக்கையை எஸ்.எஸ்.இராஜகோபாலும் தோட்ட நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்ட போதிலும் டான்ஸ்ரீ காலிட் இப் ராஹிம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று புக்கிட் செராக்கா மஇகா கிளைத் தலைவருமான வேலாயுதம் கூறினார்.புக்கிட் செராக்கா தோட்டத்தில் தொழிலாளர்கள் வீட்டுடைமைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டால், கத்ரிக்குச் சொந்தமான மற்ற தோட்டங்களிலும் இதே கோரிக்கை எதிரொலிக்கும் என் றும் அதற்கு நிலம் போதாது என்றும் அவர் காரணம் தெரிவித்து எங்களுடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டார் என்று வேலாயுதம் மேலும் கூறினார். தொழிலாளர்கள் குடியிருப்பு இப்போது அமைந்து இருந்த மேடு பாங்கான இடத்தையே ஒதுக்கித் தரும்படி நாங்கள் கோரியிருந்தோம் என்று முன்னாள் பசுமலை தோட்டத் தொழிலாளி புஷ்பவதி முனியாண்டி (வயது 65) குறிப்பிட்டார். பசுமலை தோட்டம் (டிவிஷன் 1), புக்கிட் செராக்கா நடுத் தோட்டம் (டிவிஷன் 2), புக்கிட் ஜெண்டா தோட்டம் (டிவிஷன் 3), கெர்ன்னி தோட்டம் ஆகிய வற்றை ஒருங் கிணைத்து புக்கிட் செராக்கா தோட்டம் என உருவாக் கப்பட்டது. 1970ஆம் ஆண்டிற்குப் பின் ஒருங்கி ணைக்கப்பட்ட சம்பந்தப் பட்ட தோட்டத் தொழிலாளர் களுக்கு புக்கிட் செராக்கா நடுத் தோட்ட ரப்பர் மரங்கள் அழிக் கப் பட்டு இரண்டு அறைகள் கொண்ட 125 வீடுகள் கட்டித் தரப்பட்டன. அப்போதைய ஹைலண்ட்ஸ் லோவ லண்ஸ் தோட்ட நிறுவ னத்தின் நிர்வாகி பி.ஆர்.மோர்ஹெட் இந்த புதிய வீடமைப்புத் திட்டத்தை மேற்கொண்டதாக தெரிய வருகிறது. 1980ஆம் ஆண்டிற்கு பின் இத்தோட்டம் கத்ரி நிறுவனத்திடம் கைமாறியது. தற்சமயம் சைம் டார்பி நிறுவனத்திற்குச் சொந்தமான இத்தோட்டத்தில் சுமார் 40 தமிழ்க் குடும்பங்களே தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.மேடு பாங்கான இடத்திலிருந்த தொழிலாளர்கள் குடியிருப்பு 2010ஆம் ஆண்டு உடைக்கப் பட்டது. அதற்கு மாற்றாக தரை பகுதியில் சைம் டார்பி சுமார் எண்பது வீடுகள் கட்டித் தந்துள்ளதாக வேலாயுதம் தெரிவித்தார். கத்ரி நிறுவனம் தங்களுக்கு சொந்த வீட்டுடைமைத் திட்டத்தை நிறைவேற்றும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழி லாளர்களுக்கு இறுதியில் பெரும் ஏமாற்றமே எஞ்சியது என்று முன்னாள் பசுமலை தோட்டத் தொழிலாளி கருப்பையா ரெங்கம் (வயது 68) தெரிவித்தார். ரப்பர் தொழிலை தொடக்கக் காலங்களில் கொண்டிருந்த சம்பந்தப்பட்ட தோட்டம் கத்ரியிடம் கைமாறியதும் செம்பனை உற்பத்தியை தொடங்கியதாக அறிய வருகிறது. புக்கிட் செராக்கா நடுத் தோட்டத்தில் (டிவிஷன் 2) பெரிய ரப்பர் தொழிற்சாலை தொடக்கக் காலத்தில் அமைந்து இருந்தது. வேலை ஓய்வு பெற்ற பெரும் பாலான தொழிலாளர்கள் தற்சமயம் ஜெரம், காப்பார், கோலசிலாங்கூர் ஆகிய இடங் களில் சுய முயற்சியால் வாங்கிய வீடுகளில் வசித்து வருகின்றனர். தற்சமயம் கோலசிலாங்கூரிலுள்ள தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வருவதாக குறிப்பிட்ட புக்கிட் ஜெண்டா தோட்ட முன்னாள் தொழிலாளி பிச்சை முத்துவீரன் (வயது 90), தோட்ட புறத்திலேயே சொந்த வீடு இல்லாமல் போனது பெரும் குறையே என்று வேதனைப் பட்டார். எங்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியம்தான் கிடைக்கவில்லை. சொந்த வீடாவது கிடைக் குமா என்று நம்பியிருந்த எங்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது என்று அவர் துயரப்பட்டார். புக்கிட் ஜெண்டா தோட்டத் தில் 13 வயதில் வேலைக்குச் சேர்ந்த பொன்னம்மா சங்கப் பிள்ளை (வயது 81).தோட்டத்தில் சொந்த வீடு இருந்தால் அதுவே எங்களுக்கு சுகமான வாழ்க்கை என்று கூறும் சுந்தரம் துலுக்கானம் (வயது 77), இயற்கை வளத்துடன் மலைக் காடு கள் சூழ்ந்த அந்த மேட் டுப் பகுதியி லேயே வீடு கள் கட்டித் தந்திருந்தால் அதுவே இந்த இறுதிக் காலத் தில் பெரும் மகிழ்ச்சியாக கழிந்திருக்கும் என்று ஆறு பிள்ளை களுக்குத் தாயான அவர் சொன்னார். கோல சிலாங்கூர், கார்ணவன் தோட்டத்தில் குடும்ப வறுமையால் 10 வயதில் வெளிக்காட்டு வேலையில் சேர்ந்ததாகவும் திருமணம் முடிந்து பசுமலை தோட்டத்தில் குடியேறி யதாகவும் சுந்தரம் கூறினார்.லட்சுமி தோட்டம் என்று உள்ளூர் வாசிகளால் அழைக்க ப்படும் புக்கிட் ஜெண்டா தோட்ட முன்னாள் தொழி லாளர்கள் ஆறுமுகம் அம்மாசி (வயது 74), சுதாம்மா கந்தையா (வயது 64) தம்பதியர் தற்சமயம் காப்பார், தாமான் முத்தியா ராவில் வசித்து வந்தபோதிலும் தோட்டத்திலேயே சொந்த வீடு இல்லாமல் போனது ஏமாற்றமே என்று குறிப்பிட்டனர். ஜெரம், தாமான் பெர்மாயில் வசிக்கும் நடுத் தோட்ட முன்னாள் தொழிலாளர்கள் முனியம்மா இராமச்சந்திரன் (வயது 63), ரெங்கம்மா இராமச்சந்திரன் (வயது 57) தோட்டத்தில் உழைப்பு, உழைப்பு என அதே கதியாக கிடந்த எங்களுக்கு இறுதியில் கிடைத்தது அரசாங்கத்தின் மலிவு விலை வீடுகள்தான் என்று அவர்கள் ஆதங்கப்பட்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்