மருத்துவ கவனிப்பு வழங்கப்படாததால் போலீஸ் லாக்கப்பில் மரணமடைந்த ஒரு லோரி ஓட்டுநரின் குடும்பத்தாருக்கு ஒரு முன்னுதாரண இழப்பீடாக இரண்டு லட்சம் வெள்ளி வழங்கும்படி அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் செய்திருந்த மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்றத்தால் இவ்வாண்டு தொடக்கத்தில் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை தொடர்பான தீர்ப்பு நியாயமானது என்று நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழு கூறிற்று. இந்த இழப்பீட்டுத் தொகை அதிகப்படியானது அல்ல. ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பத்தாயிரம் வெள்ளி செலவுத் தொகை வழங் கும்படியும் அரசாங்கத்திற்கு நீதிபதிகள் குழு உத்தரவிட்டதாக பி.சந்திரனின் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.விஸ்வநாதன் தெரி வித்தார். உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.நந்தபாலன் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து சந்திரனின் மரணத்திற்கு தானே பொறுப்பு என ஒப்புக் கொண்ட அரசாங்கம், இழப்பீட்டுத் தொகை தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இரண்டு லட்சம் வெள்ளி இழப்பீட்டுத் தொகை வழங்கும்படி அளிக்கப்பட்ட தீர்ப்பை தள்ளுபடி செய்யும்படி அது மேல்முறையீடு செய்தது. நீதிபதி நந்தா ஜனவரி 9ஆம் தேதி தான் வழங்கிய தீர்ப்பில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் டாங் வாங்கி போலீஸ் லாக்கப்பில் சந்திரன் மரணமடைந்ததற்கு போலீ ஸாரே பொறுப்பு என குறிப்பிட்டிருந்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்