பெட்டாலிங்ஜெயா பக்காத்தான் அளவுக்கு மீறி நம்பிக்கையாக இருப்பது அதற்கு நல்லதல்ல என்று ஜசெகவின் ஜாயிட் இப்ராஹிம் குறிப்பிடுகிறார். அடுத்த பொதுத்தேர் தலில் தேசிய முன்னணி வீழ்த்தப்படுமானால் அடுத்த பிரதமர் யார் என்பதில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் உள்ள உறுப்பு கட்சிகளின் மத்தி யில் போதிய கருத்திணக்கம் நிலவவில்லை என்று ஜாயிட் இப்ராஹிம் வருத்தம் தெரிவித்தார். ஒருவர் மட்டு மல்ல. ஒருவருக்கு மேற்பட்டோர் பிரதமர் வேட்பாளர் என்று முன்னிலைப்படுத்துவது பக்காத்தானுக்கு நன்மை பயக்கும் என்று முன்னாள் அமைச்சருமான ஜாயிட் இப்ராஹிம் சுட்டிக்காட் டினார் அன்வார் இப்ராஹிம்தான் 7ஆவது பிரதமர் என்று பிகேஆர் பரபரப்பாக பிரகடனம் செய்கிறது. அதுமட்டுமா, மேலும் ஒரு படி சென்று அன்வார் அந்த பொறுப்புக்கு வருவதற்கு முன்பு பிகேஆர் கட்சியின் தலைவர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் இடைக் காலமாக இப்பணியினை மேற் கொண்டுவருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆவது பிகேஆர் மாநாட்டில் அன்வார்தான் 7ஆவது பிரதமர் என்று பேராளர்கள் சுலோக அட்டை களை ஏந்தி நின்றது சரியா தப்பா என்று ஜாயிட் இப்ராஹிம் வினவினார். துன் மகாதீரையும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினையும் இவை எல்லாம் அவமதிப் பதற்கு சமம் என்று இவர் சுட்டிக்காட்டினார். இன்னும் எதிலுமே எதிர்க்கட்சி வெற்றியினை சாதிக்காத பட்சத்தில் பிகேஆர் இப்படி அவசர குடுக்கையாக அடுத்த பிரதமர் அறிவிப்பினை செய்வது அக் கட்சியின் ஆணவப் போக்கினையே காட்டுகிறது. எதிர்வரும் தேர்தலில் அரசை அமைக்க தேவைப்படும் 112 இடங்களை எதிர்க்கட்சியினர் கைப்பற்ற முடியுமா என்பது குறித்து இப்போதைக்கு சொல்வதற்கு இல்லை. அடுத்த பிரதமர் தாங்கள்தான் என்று சுலோக ஏட்டை ஏந்தி தம்பட்டம் அடிக்கும் தரப் பினர் இதுகுறித்து இதர கட்சிகளுடன் கலந்தாய்வு செய்ய தவறியதேன்? ஒன்றை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன். எதிர்க்கட்சி ஆதரவாளர் அன வருமே அன்வார் பிரதமராக வருவதற்கு ஆதரிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்