கேமரன்மலை கேமரன்மலையில் பிரிஞ்சாங் நகரில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஒரு வழிப்பாதை முறையினால் அங்குள்ள மக்கள் நாள்தோறும் பெரும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். இந்த ஒரு வழிப்பாதை முறையினால் ஒவ்வொரு நாளும் கடுமையான போக்குவரத்து நெரிசலை கேமரன் மலை மக்கள் மட்டு மின்றி அந்த மலைவாசஸ்தலத்திற்கு செல்கின்ற சுற்றுபயணிகளும் எதிர்நோக்கி வருகின்றனர். கேமரன்மலை மக்களுக்கு பெரும் தலைவலியை உண்டு பண்ணியுள் ளதாக கூறப்படும் இந்த ஒரு வழிப் பாதை முறையினால் ஓர் இடத்தி லிருந்து இன் னொரு இடத்தைக் கடப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகை யில் கடந்த மாதம் கேமரன்மலையைச் சேர்ந்த 70 கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். சுமார் 712 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட கேமரன் மலையில் 45 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தாப்பாவிலிருந்து கேமரன்மலைக்கும் ஈப்போ சிம்பாங் பூலாயிலிருந்து கேமரன்மலைக்கும் இரண்டு வெவ்வேறு சாலைகள் செல்கின்றன. வார விடுமுறை நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுப்பயணிகள் வந்து செல்கின்றனர். காய்கறிகள் விளைச்சலுக்கு உகந்த இடமான இங்கு 700 முதல் 1,300 விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களில் விவசாயத்தை நடத்தி வருகின்றனர். ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட லாண்ட் ரோவர் வண்டிகள் காய்கறிகளை ஏற்றிச்செல் வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுலா பஸ்கள் வார விடு முறைகளில் 50 முதல் 70 வரையில் சென்று வருகின்றன. பிரதான பட்டணங்களாக ரிங்லெட், தானா ராத்தா மற்றும் பிரிஞ்சாங் விளங் குகின்றன. இந்நிலையில் பகாங் தெங்கு மக்கோத்தாவின் ஆலோசனையின் பேரில் அந்த மலைப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைப் பதற்கு பிரிஞ்சாங்கில் அமல்படுத்தப் பட்ட ஒரு வழிப்பாதை சோதனை ஆய்வு முறையானது, கேமரன்மலையில் கடும் போக்கு வரத்து நெரிசலுக்கு வித்திட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் அங்குள்ள மக் களை முகம் சுளிக்க வைத்துள்ளது. போக்குவரத்து நெரிசலை ஒரு வழிப்பாதை முறையின் வாயிலாக குறைக்க முடியுமா? என்பதை கண்டறி வதற்காக தொடக்கமாக பிரிஞ்சாங் நகரில் பரீட்சார்த்த சோதனை அடிப்படையில் அந்த ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. ஹோட்டல்கள், உணவுக் கடைகள், சந்தைகள், பொழுதுப் போக்கு மையங்கள், கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் மையங்கள், பஸ் நிலையம், டாக்சி நிலையம் என மிக சுறுசுறுப்பான நகரமாக விளங்கும் தானாராத்தாவிற்கும் கோலத்தெர்லாவிற்கும் இடையில் அமைந்துள்ள பிரிஞ்சாங்கில் ஒரு வழிப்பாதை முறை பெரும் பாதகத்தை ஏற்படுத்தி வருவதாக மக்கள் நம்புகின்றனர். கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த முறையினால் வாகனங்கள் வேகமாக நகர முடியாமல் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வாகன நெரிசலை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள இந்த முயற்சி, நடப்பு போக்குவரத்து நெரிசலை மேலும் மோசமாக் கியுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். முன்பு இருந்த இரு வழிப்பாதை இப்படிப்பட்ட நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. அப்போதுகூட போக்குவரத்து நெரிசல் இருந்ததுதான். ஆனால். போக்கு வரத்தை நிலைகுத்தச் செய்யும் அளவிற்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைப்போல் இல்லை என்று கேமரன்மலை யின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற் காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்பான ‘ரீச்’ தலைவர் இராமகிருஷ்ணன் ராமசாமி கூறுகிறார். விடுமுறை நாட்களில் மட்டுமே போக்கு வரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது என்று கேமரன்மலை மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்ரிண் டென்டண். ஹஸாடிட் ஏ. ஹமிட் கூறியுள்ள வாதம் குறித்து இராமகிருஷ் ணன் கேள்வி எழுப்புகிறார். போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரத்தில் வாகனங்கள் படு வேகமாக செல்வதாகவும் இதனால் பாதசாரிகள் சாலையைக் கடக்க முடியாத நிலையில் உள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார். இந்நிலையில் கடந்த மே 17 ஆம் தேதியுடன் முடிவடைய வேண்டிய இந்த ஒரு வழிப்பாதை மீதான பரீட்சார்த்த சோதனையின் முடிவு என்னவானது என்று இராமகிருஷ்ணன் கேள்வி எழுப்புகிறார். பிரிஞ்சாங்கில் ஐரிஸ் ஹோட்டல் இருக்கும் இடத்தில் 64 ஆவது கிலோ மீட்டரிலிருந்து கேமரன்மலை மாவட்ட போலீஸ் நிலையம் இருக்கும் 65 ஆவது கிலோ மீட்டர் வரை மட்டுமே போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. மற்ற இடங்களில் சுமுகமான போக்குவரத்தே நிலவி வருகிறது என்று போலீஸ்துறை கூறுகிறது. எனினும் ஒரு வழிப்பாதை முறையினால் தங்கள் வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின் றனர். வாகனங்களை நிறுத்துவதற்குக்கூட இடம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இது தங்களின் ஜீவாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். நாட்டின் முக்கிய சுற்றுலாப்பகுதியான கேமரன்மலையில் இது போன்ற போக்குவரத்து சூழ்நிலை தொடருமானால் நாள டைவில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையக்கூடும் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது நாட்டின் வருமானத்தை மட்டு மல்ல ஹோட்டல் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பெரும் பாதிப்பை உண்டு பண்ணும் என்று அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதேபோன்று டாக்சியோட்டிகளும் இந்த ஒரு வழிப்பாதை முறையினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வழிப்பாதையில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசல் பயணிகள் சவாரியை வெகுவாக பாதித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவரான பகாங் மக்கோத்தா இந்த விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காண வேண்டும் என்று கேமரன்மலை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்