பெட்டாலிங் ஜெயா 14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி வருகிறது. இப்போதைய நிலையில் அரசியல் களத்திற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இழுத்துச் செல்லப் படுவதை ஆணையம் விரும்பவில்லை என்று தலைமை ஆணையர் டத்தோ ஸூல் கிப்ளி தெளிவுப்படுத்தியுள்ளார். ஒன்பது மாதங்களாக அரசாங்க அதிகாரிகளை வளைத்துப் பிடித்து கைது செய்வதில் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது என்று கூறப்படுகிறது. தற்போதைக்கு அரசியல்வாதி கள் மீது ஆணையம் தனது முதன் மையான கவனத்தை செலுத்த விரும்பவில்லை. தற்போதைக்கு அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு ஆணையம் வந்துள்ளது என்று டத்தோ ஸூல்கிப்ளி அகமது அறிவித்தார். எந்தவொரு அரசியல் கட்சியும் தங்களின் பிரச்சாரத்திற்கு ஊழல் தடுப்பு ஆணையத்தை தங்களின் பகடையாக பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்ப வில்லை. தேர்தலுக்கு முன்பு நாங்கள் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தபோதிலும் இவர்கள் தொடர்ந்து பொதுத் தேர்தலில் போட் டியிட்டு பதவி வகிப்பதற்கு இது ஒன்றும் தடங்கலாக அமைந்து விடாது. எனவே அரசியல் கட்சிகள் மக்க ளுக்கு தாங்கள் சேவையாற்றக் கூடிய ஆற்றல் கொண்டு நியாய மாக போட்டியிடட்டும். மிங்குவான் மலேசியாவிற்கு வழங்கிய பேட்டியில் டத்தோ ஸூல்கிப்ளி மேற்கண்டவாறு கருத்துரைத்துள்ளார். எனினும் தலைமை ஆணையர் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒன்றை நினைவூட்டினார். அதாவது தேர்தலில் நிற்க தேர்ந்தெடுக் கப்படும் வேட்பாளர்கள் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு அப்பாற்பட்டவராகவும் தூய்மையானவர்களாகவும் விளங்க வேண்டும். தவறானவர்களை தேர்ந்தெடுத்து பிறகு வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம். ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீது பழிபோட வேண்டாம். தேர்தலுக்குப் பிறகு தவறு செய்தவர் களை தேடி இவர்களின் வீட்டுக் கத வினை தட்டும்போது எங்களை குறை சொல்ல முற்படவேண் டாம். நான் வெறும் வார்த்தைக ளோடு விளையாடும் மனிதர் அல்ல என்பது சமுதாயத்திற்கு தெரியும். நான் விடுக்கும் ஒவ் வொரு அறிக்கைக்கும் அதன் பின்னணியில் தக்க அர்த்தம் உண்டு. தான் சார்ந்துள்ள அமைப் பின் நலனை கருத்தில் கொண்டு நான் செயல்படுகிறேன். ஊழலில் ஈடுபட்டுள்ள டான்ஸ்ரீ, டத்தோஸ்ரீ, டத்தோ மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் நடவடிக் கையிலிருந்து தப்பிக்க இயலாது என்று வருட துவக்கத்தில் நான் எச்சரிக்கை விடுத்துள்ளேன். அரசியல்வாதி மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்று எந்த தருணத்திலும் நான் கூறியது இல்லை. இப்போது இங்கே உறுதியாக கடும் தொணியில் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். ஊழல் உடைய அரசியல்வாதிகளுக்கு நான் கூறுவது என்னவென்றால் காத்திருங்கள் - நடவடிக்கை வரும் என்பதுதான்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்