சுங்கை பூலோ அடுத்தவர் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட ஆடவரை மாதின் கணவரும் 10க்கும் மேற்பட்டோரும் சேர்ந்து கொடூரமான முறையில் தாக்கி யுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1மணியளவில் கம்போங் பாயா ஜாராஸ் ஹிலிர், சுங்கை பெலோங்கில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 25 வய துடைய ஆடவர் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளார். தாக்குதலுக்கு ஆளான நபர் தன் தந்தைக்கு தகவல் தெரிவித்ததுடன், அவரின் தந்தை இந்த விவகாரம் தொடர்பில் போலீசில் புகார் செய்துள்ளதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் படைத் தலைவர் சோமு சுப்பிரமணியம் தெரிவித்தார்.சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று பார்க்கையில் தன் மகன் கொடூரமாக தாக்கப்பட்டதுடன் அவரின் மீது சுடு நீர் ஊற்றப்பட்டிருந்ததாகவும் அவரின் தந்தை போலீசிடம் தெரிவித்தார். சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்நபரின் உடலில் சுடு நீர் ஊற்றப்பட்டதால் முதுகு, தோள்பட்டை, கழுத்து ஆகிய பகுதிகள் வழண்டு போயின. கணவனுடன் விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாதுவுடன் இந்த ஆடவர் கள்ளத் தொடர்பு வைத் துள்ளார். இதனை அறிந்து கொண்ட அக்கணவன் சக நண்பர்களுடன் சேர்ந்து சம்பந்தப்பட்ட ஆடவரை கண்முன் தெரியாமல் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பந்தமாக போலீசுக்கு புகார் கிடைத்தவுடன் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாதின் கணவர் உட்பட எழுவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த கும் பலைச் சேர்ந்தவர்கள் ரோத்தான், கட்டை, சுடு நீர் மற்றும் பல ஆயுதங்களை பயன்படுத்தி ஆடவரை தாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவ ரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க ஷா ஆலாம் நீதிமன்றம் உத்தரவு பிரபித்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சமப்வம் தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் 03-61574745 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு போலீஸ் படைத் தலைவர் சோமு கேட்டுக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்