img
img

உலக பூப்பந்து அரங்கில் மலேசியா மண்ணிற்கென தனிமுத்திரை பதிப்பேன்.
திங்கள் 22 மே 2017 13:18:15

img

பூப்பந்து அரங்கில் இந்திய வீராங்கனையாக பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று இளம் வீராங்கனை கிஷோனா செல்வதுரை (வயது 19) உறுதி கொண்டுள்ளார்.அனைத்துலக பூப்பந்துப் போட்டி கடந்த மே 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இந்தோனே சியாவின் சுராபாயா நகரில் நடை பெற்றது. மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், சீனா, தைவான், இந்தியா, இந்தோ னேசியா ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மலேசி யாவை பிரநிதித்து 26க்கும் மேற் பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரி வில் களமிறங்கிய மலேசிய வீராங்கனை கிஷோனா செல்வதுரை முதல் கட்ட போட்டிகளில் வெற்றி பெற்று மாபெரும் இறுதி யாட்டத்திற்கு முன் னேறினார். இறுதியாட்டத்தில் கிஷோனா இந்தோனேசியா வின் தேசிய வீராங்கனையான கிரிஜோரியா மாரிஸ்கா துன் ஜோங்கை சந்தித்து விளையாடினார்.இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தின கிஷோனா 10-21, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் கிரிஜோரியாவை வீழ்த்தி முதல் முறை யாக அனைத்துலக அரங்கில் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தோனேசியாவின் அதன் சொந்த ரசிகர்களின் முன்னி லையில் அவர்களின் ஆட்டக்காரர்களை வீழ்த்துவது எளி தான காரியம் அல்ல.அவர்களது மண் ணில் இந்த வெற்றியை பதிவு செய்து அனைத் துலக ரீதியில் மலேசியாவுக்கு பூப்பந்து விளை யாட்டில் நற் பெயரை பெற்றுத் தந்துள்ளார் கிஷோனா செல்வதுரை. இந்தோனேசியா மண்ணில் மிகப் பெரிய சாதனையை பதிவு செய்து நாடு திரும்பிய கிஷோனா செல்வதுரை மலேசிய நண்பன் வாசகர்களுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். என் அப்பா செல்வதுரை காவல்துறை அதிகாரி. அம்மா வளர்மதி. இருவரும் பூப்பந்து விளையாட்டில் பயிற்று நர்களாக உள்ளனர். பூப்பந்து விளையாட்டில் அவர்களுக்கு இருக்கும் நாட்டம் தான் என்னை இவ் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என தூண்டு கோலாக உள்ளது.4 வயதில் இருந்து பூப்பந்து விளையாடி வருகிறேன். ஜெலுபுவில் உள்ள சீனப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை பயின்றேன். அக்காலக்கட்டத்தில் பூப்பந்து விளை யாட்டில் வெற்றிகளை குவித்து வந்ததால் புக்கிட்ஜாலில் விளையாட்டு பள்ளியில் இணைந்து படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் அடிப் படையில் படிவம் 1ஐ அவ்விளையாட்டு பள்ளியில் தான் தொடங்கி வெற்றி கரமாக பள்ளி படிப்பை முடிந்தேன். தற்போது முழு நேரமாக பூப் பந்து விளையாடி வருகிறேன்.புக்கிட் கியாரா தேசிய விளையாட்டு மன்றத்தில் முழு நேரமாக பயிற்சிகளை பெற்று வருகிறேன். என்னுடன் தீனா, ரூபன், சதீஸ்தரன் ஆகியோரும் பயிற்சி பெற்று வருகின்றனர். உலக பூப்பந்து தரவரிசையில் 6ஆம் இடத்தை பிடித்திருந்த சைரூல் அமார் அயூப் தான் என்னுடைய முழு நேர பயிற்சியாளர். அவர் வழங்கும் பயிற்சிகள் தான் பூப்பந்து விளையாட்டில் வெற்றிகளை குவிக்க உறுதுணையாக உள்ளது. குறிப்பாக இந்தோனேசிய வீராங்கனை கிரிஜோரியா அனைத் துலக ரீதியில் நன்கு அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரராக இருந்த தலாவ் அவருடன் ஈடு கொடுப்பதற்கு சற்று சிரமப்பட்டேன். எனினும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாக விளையாடும்படி பயிற்சியாளர் வழங்கிய உற்சாகம் தான் என்னால் கிரிஜோரியாவை வீழ்த்த முடிந்தது என்று அவர் கூறினார்.தேசிய ரீதியில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்துள்ளேன். அதே வேளையில் அனைத்துலக ரீதியில் முதல் சாம்பியன் பட்டம் இந்தோனேசிய போட்டி வழி தான் கிடைத்தது. வரும் காலத்தில் இதே போன்று பல சாதனைகளை படைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய மிகப் பெரிய லட்சியமாக உள்ளது. விரைவில் சீ விளையாட்டுப் போட்டி மலேசியாவில் நடைபெறவுள்ளது. பல முன்னணி ஆட்டக்காரர்கள் இருக்கும் பட்சத்தில் சீ போட்டியில் களமிறங்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. இருந்த போதிலும் சீ போட்டி மலேசியாவில் நடைபெறுவதால் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தாம் உள்ளதாக கிஷோனா கூறினார்.சிறுவயது முதல் பூப்பந்து விளையாட்டில் ஈடுபட்டு வருவதால் அதில் சாதிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய இலக்காக உள்ளது.ஆகையால் ஏதாவது ஒரு பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதையெல்லாம் நான் இலக்காக கொண்டிருக்கவில்லை.அதே வேளையில் பெண்களுக்கான உலக பூப்பந்து தரவரிசை யில் முன்னணி பெற வேண்டும் என்பது என்னுடைய தூரநோக்கு திட்டமாகும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img