பொதுமக்களின் வசதிக்காக இ-ரிப்போட்ர்டிங் அல்லது இணையத் தளம் வழி போலீஸ் புகார் செய்யும் சேவையினை கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் டத்தோ அமார் சிங் நேற்று செராஸில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். மலேசிய நண்பன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது டத்தோ அமார் சிங்கிடமிருந்து டத்தோ ஷாபி நினைவுப்பரிசை பெற்றுக் கொண்டார். இ-ரிப்போர்ட்டிங் அல்லது இணையத்தளம் வழியாக போலீஸ் புகார் செய்யும் முறை மக்களுக்கு ஒரு சிறந்த மாற்று வழியாக அமையும் என்று மலேசிய நண்பன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான் கருத்துரைத்தார். எனினும், இச்சேவை முறை கோலாலம்பூரில் மட்டுமின்றி நாடு முழுவதும் அமல்படுத் தப்பட வேண்டிய ஒன்றாகும் என்று அவர் சொன்னார். செராஸில் ஊடகவியலாளர்களுடன் நேற்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்று கையில் டத்தோ ஷாபி இக்கருத்தை முன்வைத்தார். இந் நிகழ்ச் சியில், வீட்டில் அல்லது தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் செய்யும் இ-ரிப்போர்டிங் சேவையை கோலா லம்பூர் போலீஸ் படைத் தலைவர் டத்தோ அமார் சிங் தொடக்கி வைத்தார். தொடர்ந்து பேசிய டத்தோ ஷாபி, இச்சேவை போலீஸ் நிலை யங்களில் ஏற்படக்கூடிய நெரி சலை குறைப்பதற்கு வழி வகுக்கும் என்பதுடன், இச் சேவையை முழுமையாக கண்காணிக்கக் கூடிய கடப்பாடு உள்ளது என்றும் குறிப்பிட்டார். மக்களின் நலனுக்காக அரச மலேசிய போலீஸ் படையினர் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பத்திரிகை சார்பாக மலேசிய நண்பன் நிச்சயமாக ஆதரவு தந்து, உறுதுணையாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்