ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்களை விரட்டிப் பிடிப்பது போல், ஊழல் அரசியல்வாதிகளை குறிப்பாக அரசு நிதிகளைக் கையாள்பவர்களை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) விரட்டிப் பிடிக்க வேண்டும் என்று 'சி4' அமைப்பின் நிர்வாக இயக்குநர் சிந்தியா கேப்ரியல் கூறினார்.ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்குத் தரப்படும் சலுகையை எதிர்த்துப் போராடுவதற்கான மையம் எனப்படும் அந்த 'சி4' அமைப்பின் இயக்குநரான சிந்தியா, அரசுப் பதவி வகிப்பவர்களும் பொது நிதிகளை நிர்வகிப்பவர்களும் மக்களுக்கு கணக்குச் சொல்லியாக வேண்டும் என்றார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல்வாதிகள் தங்கள் சொத்து விவரங்களை அறிவிக்குமாறு செய்வதற்கே, கடந்த வாரத்தில் கள்ள நாயகம் மலேசிய நிகழ்ச்சியை நாங்கள் துவக்கினோம். நேர்மையுள்ள அரசியல்வாதிகளே நம்மை பிரதிநிதிக்க வேண்டும். ஊழல் அரசியல்வாதிகளுக்கு வெளி யேறும் வழியை மலேசியர்கள் காட்ட வேண்டும் என்று அவர் கூறினார். அரசு ஊழியர்களை நியமிக்கும் போது இன்னும் கடுமையாகச் சோதிப்பதற்கான நடைமுறைகள் தேவை என்று அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா கூறியுள்ளது பற்றி சிந்தியா கருத்துரைத்தார்.இதனிடையே, அரசாங்க ஊழியர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆதாயவாதிகளான தரப்புகள் ஏற்பாடு செய்வதில் நலன்கள் முரண்படுவது பற்றியும் அரசாங்கம் ஆராய்கிறது என்று பிரதமர் இலாகாவில் நல்லாட்சி மற்றும் நேர்மைக்குப் பொறுப்பான அமைச்சர் பால் லோவ் செங்குவான் கூறீனார். இந்த விஷயத்தில் ஒரு வழிகாட்டி விதிமுறையை பிரதமர் இலாகாவும் பொதுச் சேவை இலாகாவும் தயாரித்து வருவதாக அவர் சொன்னார். இத னிடையே, ஊழல் ஒழிப்பு ஆணையம் அரசியல்வாதிகளையும் விரட்டத் தொடங்கியுள்ளது என்று மலேசிய அனைத்துலக வெளிப்படை இயக்கத்தின் தலைவர் அக்பர் சத்தார் கூறினார்.ஒரு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான அப்துல் லத்தீப் பண்டி மொத்தம் வெ.3 கோடியே 3 லட்சம் சம்பந்தப்பட்ட 33 ஊழல் குற்றச் சாட்டுகளை எதிர்நோக்கியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். மலாக்காவில் ஒரு முன்னாள் மஇகா உதவித் தலைவர் வெ.1 கோடியே 30 லட்சம் பெறுமான வடிகால் குழாய்களை நீர்ப்பாசன இலாகாவிற்கு விநி யோகித்ததாக பொய்யான கோரிக்கையை சமர்ப்பித்ததாக காவலில் வைக்கப்பட்டார். ஊழல் சம்பந்தமான தகவல்களை பொதுமக்கள் அந்த ஆணை யத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்