எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கான சமூக சேவைகள் பல செய்துவரும் சாம்ராஜ் இவெண்ட் குழுவினர் வரும் 28 மே 2017 ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினை நடத்தவிருக்கின்றனர். இந்நிகழ்வு காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும். அன்னையரை கௌரவிக்கும் வகையில் மலரவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பல சிறப்பம்சங்கள் இடம்பெறுவதோடு உள்நாட்டு இளம் கலைஞர்களை உருவாக் கும் குரல் தேர்வாக பாடல் திறன் போட்டியும் நடைபெறவுள்ளது. இது வயது 3முதல் 17 வரை இரு பிரிவாகவும் 18 வயதுக்கு மேல் இன்னொரு பிரிவாகவும் நடக்கும். பாடல் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் உடன டியாக எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். வெற்றியாளர்களுக்கான பெறுமதியான பரிசுகள் உண்டு. மேலும் சிறந்த பாடகர்களை நாங்கள் வெளியிடும் பாடல் ஆல்பத்தில் இணைத்துக் கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறோம். உணவு, பானம், சுகாதார பரிசோதனை, மருதாணி போடுதல், மசாஜ், போட்டோ சூட், அன்பளிப்புகள் என அத்தனையும் இலவசமாக தனித்தனி பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாராளமாக வந்து பயன்பெறலாம். குவாந்தான் பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்வில் அனைவரும் திரளாக வந்து கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 011-2170 2025.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்