இதனால் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ராஜ்நாத்சிங், சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையாநாயுடு, நிதின்கட்கரி, மனோகர்பாரிகர் உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த மத்திய அமைச்சர்களும் பங்கேற்கிறார்கள். கூட்டத்தில், மாநிலங்களுக்கு இடையிலான முக்கிய பிரச்னைகள் குறித்தும், மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். குறிப்பாக மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள், உள்நாட்டு பாதுகாப்பு, பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதல் மற்றும் அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது, ஆதார் திட்டம், பள்ளி கல்வி, நேரடி மானிய திட்டங்கள் குறித்த கருத்துக்கள் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. டெல்லியில் நாளை நடைபெறும் கூட்டத்தில், தமிழகம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பாரா என்று தலைமை செயலக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'முதல்வர் டெல்லி செல்வது குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக இதுவரை வரவில்லை. அதனால் ஜெயலலிதா டெல்லி செல்வது சந்தேகம்’’ என்றே பதில் அளித்தனர். அவருக்கு பதில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறினர். தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி 16ம் தேதி டெல்லியில் கூட்டியுள்ள முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். அந்த கூட்டத்தில், பங்கேற்று தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதேபோன்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், ஜெயலலிதா 16ம் தேதி டெல்லி சென்று முதல்வர் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்