இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி என்ற விளையாட்டின் பெய ரைக் கொண்டு நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு நட வடிக்கையில் 21 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குண்டர் கும்பல், போதைப்பொருள் விநியோகம் ஆகிய சட்டவிரோத நடவடிக்கை களுக்கு துணை புரியும் அதிகாரிகளை குறி வைத்து இந்த ஓப்ஸ் கபடி எனும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு துணை புரியும் போலீஸ் அதிகாரிகள் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருவதாக தேசிய காவல் துறையின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ நோர் ரஷிட் இப்ராஹிம் தெரிவித்தார்.இந்த அதிரடி நடவடிக்கை மே மாத ஆரம்பத்தில் செயல்படத் தொடங்கியது. இதுவரையில் 21 காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தவறுகள் நடந்ததற்கான காரணமும் நிர்வாக பலவீனங்கள் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு வருவதாக தலைநகரிலுள்ள தேசிய காவல் துறையின் பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு துணை போன புக்கிட் அமான் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் மூத்த அதிகாரிகள் உட்பட போலீஸ் காரர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேசிய ஊழல் தடுப்பு இலாகா அதிகாரிகளால் மலாக்காவில் கைது செய்யப்பட்ட 7 போலீஸ் அதிகாரிகள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார். மேலும் நெறிமுறையற்ற நடவடிக்கைகளில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் வேலை இட மாற்ற திட்டம் மேற்கொள்ளப் படவுள்ளது. இத்திட்டத்தின் வழி நேர்மையற்ற அதிகாரிகளின் செயல்களை குறைக்க முடியும். அதுமட்டுமின்றி புதிய இடங்களுக்கு மாற்றப்படும் இவர் கள் மீண்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளாமல் இருப்பதையும் தடுக்க முடியும். இந்நிலையில், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நேர்மையான வழியில் செயல்படும் அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படவிருப்பதாகவும் நோர் ரஷிட் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்