சிரம்பான் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகள் வீட்டில் புகுந்த 2 இந்திய முகமூடி நபர்கள் 50 பவுன் தங்க நகைகள், ரொக்கப்பணத்தை கொள்ளையிட்டதோடு, வங்கியில் இருந்து பணத்தை எடுத்து கொடுக்குமாறு மகளை கடத்தி தந்தையை மிரட்டி பிணைப்பணம் கேட்டு கிடைத்ததும் காட்டில் தப்பி தலை மறைவானார்கள். நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் சிரம்பான், ஜாலான் டெம்ப்ளர் ஜெயாமாஸ் குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளர் அவரது தாயார், மகளை கட்டி போட்டு கொள்ளையிட்டதாக போலீஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். வீட்டின் வெளியே காத்திருந்த 2 இந்திய முகமூடி நபர்கள் சமயம் பார்த்து திடீரென வாசல் வழியாக உள்ளே புகுந்து வீட்டிலிருந்த மூவரையும் மடக்கி கழுத்தில் பாராங்கத்தியை வைத்து திருமணத்திற்கு வாங்கிய தங்க நகைகளையும் பணத்தையும் மரியாதையாக எடுத்து கொடுங்கள் இல்லையென்றால் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டது. வீடு முழுவதும் சோதனை செய்த கொள்ளையர்கள் வங்கி சேமிப்பில் வெ.40 ஆயிரம் இருப்பதை அறிந்து அதனை எடுத்து வந்து கொடுக்குமாறு அச் சுறுத்தியதுடன் போலீசுக்கு தகவல் கொடுக்க கூடாது என எச்சரித்தனர். வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து வருவதற்குள் வீட்டிலிருந்த காரில் மகளை யும் கடத்தி குறிப்பிட்ட இடத்தில் பணத்தை கொடுத்து விட்டு மீட்டு செல்லுங்கள் என்று கொள்ளையர்கள் கட்டளையிட்டுள்ளனர். என்ன செய்வது என்று புரியாமல் பதற்றத்திற்குள்ளான தந்தை பணப்பையை ஒப்படைத்து மகளையும் மீட்டதுடன் வீட்டிலிருந்து எடுத்து வந்த காரையும் அருகிலுள்ள காட்டில் கைவிட்டு முகமூடி கொள்ளையர்கள் தலைமறைவானதாக கூறினார். திருமண வீடு என்று தெரிந்து திட்டமிட்டு கொள்ளை யிடப் பட்ட இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தீவிர புலன் விசாரணை மேற்கொள்வதுடன் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸ் தரப் பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்