காஜாங் அறிவு சார்ந்த அல்லது அறிவை மேம்படுத்துகிற கல்வியே (அறிவு + இயல் ) அறிவியல் என்று கூறலாம். ஒரு பொருள் அல்லது செய்தியை வரையறுக் கப்பட்ட முறையில், ஆழமாக, ஆராய்ந்து பரீட்சித்து பார்ப்பதே அறிவியலாகும்.அதன் பொருட்டு இளம் ஆய்வாளர்களின் அறிவியல் புத்தாக்க தொழில் நுட்பத் துறையில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மலேசிய இந்தியர்களுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக கருதப்படுகிறது. குறிப்பாக தலைநகர் கோலாலம்பூரில் உள்ள கே.எல்.சி.சி மாநாட்டு மையத்தில் இடம்பெற்ற ஐடெக்ஸ் எனப்படும் அனைத்துலக அறிவியல் புத்தாக்க தொழில்நுட்ப கண்காட்சியில் நடைபெற்ற அறிவியல் போட்டிகளில் காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 6 தங்கப்பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெரும் புகழை சேர்த்துள்ளனர். உலக அளவிலான இப்போட்டியில் மலேசியா உட்பட வெளிநாட்டைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் களமிறங்கினர். ஆசிரியர் தங் கேஸ்வரி அண்ணாமலை, பத்மா சுப்ரமணியம் ஆகியோரின் தலைமையில் காஜாங் தமிழ்ப்பள்ளியின் சார்பில் 11 குழுக்களிலிருந்து 63 மாணவர்கள் பங்கு கொண்டு தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். இதில் இளம் ஆய்வாளர்களுக்கான பிரிவில் களமிறங்கிய மாணவர்கள் 6 தங்கப் பதக்கங்க ளும் 2 வெள்ளிப் பதக்கங்களும் 3 வெண்கலப் பதக்கங்களும் வென்றனர். ஆசிரியர்களின் கருத்து ஆசிரியர் நெடுஞ்செழியன்:தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சியில் மலேசிய நண்பன் ஒரு முக்கியமான பங்கினை ஆற்றி வருவதை மறுப்பதற்கில்லை. ஒவ் வோர் ஆண்டும் மலேசிய நண்பன் அமல்படுத்தி வரும் தமிழ்ப்பள்ளியே எனது தேர்வு என்ற சுலோகம் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புவதை சாத்தியமாக்கியுள்ளது. அது மட்டுமின்றி, இதுபோன்ற அறிவியல் விழாக்களுக்கும் மலேசிய நண்பன் முன்னுரிமை அளித்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உற்சாகத்தை அளித்து வருவது பாராட்டுக்குரியது. ஆசிரியர் பத்மா சுப்ரமணியம்: தமிழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் மத்தியில் சிறந்த ஆளுமை மற்றும் மனித நேய அடிப்படையில் சிறந்த மகிமை வேறுபாடு ஆகியவற்றை உருவாக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு இந்த இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவில் காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் களமிறங்கினர். இரண்டாவது முறையாக இப்போட்டியில் பங்கு கொண்ட மாணவர்கள் சற்றும் எதிர்பாராத அளவிற்கு சாதனை படைத்தது பெரு மையாக உள்ளது. தலைமை ஆசிரியர் ஜோன் பொஸ்கோ: அறிவியல் துறைகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளவில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பதக்கங்களை அள்ளிக் குவித்து நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர். இதில் அனைவரின் உழைப்பும் அடங்கியுள்ளது. குறிப்பாக மாணவர்கள் மத் தியில் உயர் நிலை சிந்தனை ஆற்றலை வளர்க்கவும் கல்வி அமைச்சின் சீரிய திட்டங்களை சிறந்த முறையில் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும் இதுபோன்ற போட்டிகள் வழி காண்கின்றன. இந்நிலையில் ஒரு மாணவரின் தனி திறமை வெளிப்படுவதுடன் பல்கலைக் கழக நடவடிக்கைகளுக்கும் வழித் தடமாக அமைகிறது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுதானந்தன்: நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் நல்ல அடைவு நிலை கண்டுள்ளதுடன் அறி வியல், கணக்கு, ஆங்கிலம் போன்ற பாடங்களில் மற்ற பள்ளி மாணவர்களை விடச் சிறந்து விளங்க அறிவியல் விழாவில் கலந்து கொள்ளும் மாணவர் களின் திறன் மேம் பாடு காணவும் உதவுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளில் பல கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி உலக அளவில் முத்திரைப் பதித்துள்ள காஜாங் தமிழ்ப்பள்ளி மீண்டுமொரு சாதனையை படைக்க இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தா நகருக்கு தனது சாதனை நட்சத்திரங்களை அனுப்பி வைக்க ஆயத்தமாகி வருகிறது. மாணவர்களின் கருத்து எஸ்.ஹாரிஸ் குமார், தி.கதிரேஸ்: இந்த இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழாவில் ஜெயிப்பதோ தோற்பதோ முக்கியமல்ல. இதில் அறிந்து கொள் வதுதான் மிக முக்கியம். தற்போது எங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும் தீயானது இன்னும் நூறு ஆண்டுகளுக்கு எரிய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு. கேவன் ரெட்டி: இரண்டாவது முறையாக ஐடேக்ஸ் அனைத்துலக அறிவியல் புத்தாக்க தொழில்நுட்பப் போட்டியில் பங்கு கொண்டு தங்கம் வென்றதை கண்டு மகிழ்ச்சி கொள்கிறோம். அதோடு கடந்தாண்டு பாலியில் நடைபெற்ற இளம் ஆய்வாளர்களுக்கான போட்டியில் பங்கு கொண்டது பெரும் பாக்கி யமாக கருதுகிறோம். அதே சமயம் இம்முறை போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதற்கு கடந்தாண்டு அனுபவம் பெரும் உதவியாக இருந்தது. மேலும் எங்களின் இந்த இரட்டை வெற்றிக்கு தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட சக நண்பர்கள் பக்க பலமாக விளங்கினர். யூ.ரூபன், கே.ரிதேஷ்: அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் ஆக்கம் தருவதாக இருக்க வேண்டும். பள்ளிகளில் படிக்கும்போதே அறிவியல் பாடத்தில் ஆர்வமாக இருந்தால் மேல்படிப்பு படிக்கும்போது புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்குவது சுலபமாக இருக்கும். ஜி.ரிக்ஷேன்திரன், என்.யோகிட்: புதிய கண்டுபிடிப்புகளுக்கு முழுமையான செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்பதுதான் டாக்டர் அப்துல்கலாமின் லட்சியக் கனவு. அதனை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் தனது கனவு. எஸ்.ஹெர்வின் கணேஷ், ஆர்.அபிராமி: எழுவது முதல் விழுவது வரை அன்றாடம் நம் செயல்பாடுகளில் அறிவியலின் பயன்பாடு நீக்கமற நிறைந்தி ருப்பதில் எத்தணையும் ஐயமில்லை. விழித்தவுடனேயே தேவைப்படும் நீர் முதல் உறக்கம் வரை விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் இல்லாமல் எந்த நாளும் கழிவதில்லை. இவற்றின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக ஆய்வு செய்வதே ஆராய்ச்சியாளர்களின் கடமை. எம்.சங்கீர்த்தன, ஜி.கவினேஷ்ஸ்ரீ: நாமும் விண்வெளி ஆராய்ச்சியாளராகலாம் என்பதுடன் தொலை நோக்கை எவ்வாறு பயன்படுத்துவது அவற்றை எப்படி உருவாக்குவது போன்றவற்றை குறித்து அறிந்து கொள்வதன் ஆர்வமே தன்னை ஆராய்ச்சியாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் தூண்டியது. எஸ்.ஸ்ரீ தர்சினி, கே.திவ்யா:பல்வேறு உணவு வகைகளை நாம் இங்கு இறக்குமதி செய்கிறோம். இவற்றை எல்லாம் கண்காணிப்பதற்கும் ரசாயன பாதிப்பு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் தேசிய உணவுக் கொள்கையினை உருவாக்கி அறிவியல் ரீதியில் ஆராய்ச்சியினை மேற் கொள் ளவே விருப்பம். எஸ்.ரிஷிகா, ஹரினி: நமது மக்களின் ஆரோக்கியத்தை பேணுவதில் ரசாயன அதிகாரிகளின் பங்கு மகத்தானது. அதன் பொருட்டு தரமான உணவுகளை தயாரித்து மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஈடு செய்வதையே ஓர் ஆராய்ச்சியாளர் இலக்காக கொண்டிருக்க வேண்டும். டிவேஷ் ரெட்டி, பிரதீபன்: உயர்ந்த வருமானம் மற்றும் வளர்ச்சியடைந்த நாடாக மலேசியா உருமாற்றம் காண அறிவியல் துறை அவசியமானதாக கருதப் படுகிறது. அவ்வகையில் எதிர்காலத்தில் இதர நாட்டு ஆராச்சியாளர்களை காட்டிலும் மலேசிய ஆராய்ச்சியாளர்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதை உணர்த்தவே இளம் வயதிலேயே இத்துறையில் ஆர்வம் கொண்டிருக்கிறோம். நாம் இந்த உலகில் எத்தனையோ விசயங்களை அறிகிறோம், பல படைப்புகளைக் கண்டு பிரமிக்கிறோம், நாமே ஒரு மிகப் பெரிய அதிசயம் என்பதை நம்மை நாம் நோக்கினால் அறியப் பெறுவோம்.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்