ஏர்செல்- மெக்சிஸ் ஊழல் வழக்கில் மலேசிய கோடீஸ்வரரான டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் உட்பட இருவரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க இயலாது. அவ்வாறு அறிவிக்கும்படி செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவான சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அது நேற்று விசார ணைக்கு வந்தது. அதில், மலேசிய கோடீஸ்வரரான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் மற்றும் தனது வர்த்தக சகாவான ரால்ப் மார்ஷல் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க, சிபிஐ சார்பாக மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 2 பேரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க முடியாது என்றும், அவர்கள் மலேசிய குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் நீதிமன்றம் இந்த முடிவை கூறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, சம்பந்தப்பட்ட 2 பேரையும் விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி, சி.பி.ஐ. நோட்டீஸ் விட்டும், எந்தப் பதிலும் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏர்செல்-மெக்சிஸ் வழக்கில் கலைஞர் கருணாநிதியின் பேரன்களான தயாநிதி மாறன், கலாநிதி மாறன், இவரின் மனைவி காவேரி கலாநிதி, சௌத் ஏசியா எஃப்எம் நிறுவன மேலாண்மை இயக்குநர் கே.சண்முகம் ஆகியோர் மீதும் மலேசிய கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் சன் டைரக்ட், சவுத் ஏசியா எஃப்எம் ஆகிய 2 நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் குற்றம் செய்ததற்குப் போதிய முகாந்திரம் இல்லாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. சற்றும் எதிர்பாராத இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்