நடப்பு தலைமை நீதிபதியும் மேல் முறையீட்டு நீதிமன்றத் தலைவரும் பணி ஓய்வு பெறும்போது, மூன்று பெண்கள் உட்பட ஒன்பது கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் நீதித்துறையின் அந்த உயரிய பதவிகளுக்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனினும், வரும் 2019 மே மாதத்திற்குள் படிப்படியாக எழு வரும், மற்றொருவர் 2022-லும் பணி ஓய்வு பெறவிருப்பதால் நீதித்துறை நியமன ஆணையம் (ஜேஏசி) ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கும் என்பதை தவிர்க்க இயலாது. எந்தவொரு பதவியும் வகிக்காத ஏழு கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளும் இந்த உயர் பதவிகளுக்கான நியமனத்திற்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று வழக்கறிஞர்களும் பணி ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியும் கருத்துக் கூறியுள்ளனர். தலைமை நீதிபதி ராவுஸ் ஷாரிப் ஆகஸ்ட் 3ஆம் தேதியும், மேல் முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ஸூல்கிப்ளி அகமட் மகினுடின் செப்டம்பர் 27ஆம் தேதியும் பணி ஓய்வு பெற்ற பின்னர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் படிப் படியாக தங்கள் பதவியில் இருந்து வெளியேறும் போது நிலவக்கூடிய வழக்கத்திற்கு மாறான ஒரு சூழல் குறித்து அவர்கள் இவ்வாறு கருத்துரைத்தனர். பெயர்ப்பட்டியலை தயார் செய்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் ஒப்படைக்கும் பணியில் நீதித்துறை நியமன ஆணையம் ஈடுபட்டிருப்பதாக எப்எம்டிக்கு தெரிய வருகிறது. கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், ஆட்சியாளர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் பிரதமரின் பரிந்துரை மீது மாமன்னர் இந்த நியமனங்களை செய்வார். பணி ஓய்வு பெற்றுள்ள கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் இது பற்றி கருத்துரைக்கையில், மலேசியா, இந்தியா இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டுள்ளன. இந்தியாவில்,உச்ச நீதிமன்றத்தின் மிகவும் மூத்த நீதிபதியே தலைமை நீதிபதியாக நிய மனம் செய்யப்படுவார். அது குறுகிய காலத்திற்கானாலும் பரவாயில்லை. ஒரு தலைமை நீதிபதி ஒரு சில நாட்களுக்கு மட்டுமே பதவி வகித்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆகவே, இரு நீதிபதி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீதிபதியாக இருப்பார் என்பதற்காக தலைமை நீதிபதியாக அவரை நியமிக்காமல் இருப்பது ஏற்புடைய காரணமே அல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே, கூட்டரசு நீதிமன்றத்தின் நடப்பு நீதிபதிகளில் தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு பஞ்சமே இல்லை என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத் தின் தலைவர் ஜோர்ஜ் வர்கேஸ் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்