மலேசிய இந்தியர்களுக்கான நீல பெருந்திட்டம் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நடவடிக்கைகளின் அமலாக்கத்திற்காக செடிக் அல்லது இந்திய சமுதாய சமூகப்பொருளாதார மேம்பாட்டு பிரிவை மறுசீரமைப்பு செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் உத்தரவிட்டுள்ளார். இதன் கீழ், ஓர் அமலாக்க நிறுவனமாக செடிக்கின் பணித்தன்மை முழுமையாக மாற்றம் காணும் என்பதுடன், மொத்தம் 58 முழு நேர பணியாளர்களை அது கொண்டிருக்கும் என்றும் இதன் தலைமை இயக்குநராக பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ்.ராஜேந்திரன் வரும் மே 22-ஆம் தேதி முதல் பொறுப் பேற்பார் என்றும் பிரதமர் துறை நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கை கூறுகிறது. எஸ்.ஐ.டி.எஃப் எனும் சிறப்பு அமலாக்கப் பிரிவு, சீட் எனும் இந்திய தொழில் முனைவர்களுக்கான சிறப்பு செயலகம், பி.டி.எஸ்.டி எனும் தமிழ்ப்பள்ளி களின் எதிர்காலத்திற்கான திட்ட வரைவு பிரிவு ஆகியன இனி மறுசீரமைப்பு செய்யப்பட்ட இப்புதிய அமலாக்க நிறுவனத்தின் கீழ் செயல்படத் தொடங்கும். இதன் தலைமை இயக்குநராக பேராசிரியர் ராஜேந்திரன் இந்நிறுவனத்திற்கு தலைமை தாங்குவார். இவருடன் ஒரு துணைத் தலைமை இயக்குநரும் நிய மனம் செய்யப்படுவார். அது போக, இந்த நீல பெருந்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அமலாக்கம் செய்யும் பணிகளுக்கு ஆதரவாக கீழ்க் காணும் ஆறு பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. * கல்வி மற்றும் இளைஞர் மேம்பாடு * பொருளாதார மற்றும் வருமான அதிகரிப்பு * சமூக நல மேம்பாடு * அடையாளம் மற்றும் ஒருங்கிணைப்பு * ஆராய்ச்சி மற்றும் சிறந்த நடைமுறைகள் * சிறப்புத் திட்டங்கள் எஸ்.ஐ.டி.எஃப்-பின் பங்கு இதன் கீழ் மறுஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் 10 எஸ்.ஐ.டி.எஃப் சேவை மையங்களை உருவாக்குவதன் வழி இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாக இது செயல்படும். இதற்கு முன்பு, சி.சி.ஐ.சி எனும் நிர்வாகக் குழுவின் அமைப்பு குறித்து பிரதமர் நஜீப் அறிவித்திருந்தார். சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் இதற்கு தலைமை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இக்குழுவின் மேற்பார்வையில் செடிக் மாதம் ஒரு முறை சந்திப்பினை நடத்தி பிரச்சி னைகளுக்குத் தீர்வு காணும் வழி வகைகளைக் காணும். இந்த நீல பெருந்திட்டத்தின் கீழ் அதன் இலக்குகள் அமலாக்கம் செய்வதில் இந்திய சமூகத்தின் நலனை முன் நிறுத்தி மேற்கொள்ளப்படவிருக்கும் அனைத்து நடவடிக்கைகளின் மேம்பாட்டையும் ஆய்வு செய்வதற்கு ஒரு வருடத்தில் நான்கு தடவை சிறப்பு அமைச்சரவைக் குழு சந்திக்கும். இச் சந்திப்புகளுக்கு தொடர்ந்து பிரதமரே நேரடியாக தலைமை தாங்குவார். செடிக் ஆலோசகராக நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் முகமட் இர்வான் சேகர் பின் அப்துல்லாவை பிரதமர் நியமனம் செய்து ளார் என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்