பூச்சோங், கின்றாரா சூதாட்ட மையமொன்றில் கொள்ளையிட்ட பிறகு அங்குள்ள இந்தோனேசிய பணிப்பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக போலீ சாரால் தேடப்பட்டு வந்த இரு இந்திய ஆடவர்களில் ஒருவன் நேற்று போலீஸ் நடவடிக்கையின் போது 12-ஆவது மாடியில் உள்ள தனது வீட்டிலிருந்து கீழே குதித்து மரணமடைந்தான். போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பிக்கும் நோக்கத்தில் அந்த ஆடவர் கீழே குதித்ததாக செர்டாங் ஓசிபிடி, உதவி ஆணையர் மெகாட் முகமட் அமினுடின் மெகாட் அலியாஸ் கூறினார். இச்சம்பவம் தொடர்பில் கீழ்க்கண்ட விளக்கத்தை அவர் நிருபர்களிடம் அளித்தார். கடந்த வியாழக்கிழமை, பொதுமக் களிடமிருந்து ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இரவு 10.10 மணிக்கு தாமான் ஸ்தாப்பாக் ஜெயாவில் உள்ள ஸ்ரீசெமராக் பிபிஆர் அடுக்ககத்தில் உள்ள ஒரு வீட்டை போலீஸ் குழு முற்றுகையிட்டது. பல முறை வீட்டின் கதவை தட்டியும் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. கதவையும் யாரும் திறக்கவில்லை. உடனே, போலீசார் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டின் வரவேற்பறையில் ஒரு பெண்ணும் ஓர் ஆடவரும் அமர்ந்திருந்தனர். அந்த நேரத்தில் வீட்டின் சமையல் அறையிலிருந்து சில பொருள்கள் கீழ் விழுவது போலீசாருக்கு கேட்டது. உடனே சமையில் அறைக்குள் நுழைந்தபோது, வெளியே போடப்பட்டிருந்த இரும்புத் தடுப்பில் சம்பந்தப்பட்ட அந்த சந் தேகப் பேர்வழி தொங்கிக் கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். வீட்டிற்குள் வரும்படி போலீசார் பலமுறை கேட்டுக்கொண்டும் அந்த ஆடவர் மசியவில்லை. திடீரென அச்சந்தேகப் பேர்வழி போலீசாரின் கண் எதிரே கீழே குதித்தார். கீழே விரைந்து சென்ற போலீசார் அந்த ஆடவரை சோதித்துப் பார்த்ததில் அவர் உயிருடன் இருப்பதை அறிந்து அம்புலன்சை வர வழைத்தனர். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆடவரை கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது. வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைமையக நடவடிக்கை அறை, இதனை திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளது என்று மெகாட் தெரிவித்தார். மரணமடைந்த இச்சந்தேகப் பேர்வழி ஏற்கெனவே இரு போதைப்பொருள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் போலீசார் கூறினர். கின்றாரா சூதாட்ட மையத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கோலசிலாங்கூரில் ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.அச்சூதாட்ட மையத்தில் இவ்விரு ஆடவர்களும் இந்தோனேசிய பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து இச்செய்தி மிகவும் பரபரப்பானது. சூதாட்ட மைய உரிமையாளரும், பாதிக்கப்பட்ட பெண்ணும் போலீசில் இது குறித்து புகார் செய்துள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்