மஇகா உறுப்பினர்களில் சுமார் 120,000 பேர் இன்னும் வாக்காளர்களாக பதிந்து கொள்ளாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் மஇகா கிளை உறுப் பினர்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு குறைவும் ஒன்றாகும் என்று கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறினார்.செயல்படாமல் இருக்கும் கட்சி உறுப்பினர்கள், தங்களை வாக்காளராக பதிந்து கொள்ள எவ்வித முயற்சியும் எடுக்காதது இதற்கு காரணமாக இருக்கக் கூடும் என்று டாக்டர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறினார். எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி வைத்த பின்னர் அவர் செய்தி யாளர் களிடம் இதை தெரிவித்தார். மஇமா இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அரசியல் அமைப்பு முறையில் அவர்களுக்கு அதிக நெருக்கம் கிடையாது. ஆகவே இம்மாதிரியான உறுப்பினர்கள் வாக்காளராக பதிந்து கொள்வதற்கான ஆர்வத்தை அவர்களிடையே உருவாக்க நாம் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். நாடு தழுவிய நிலையில் இன்னும் பதிவு செய்யாமல் இருக்கும் கட்சி உறுப்பினர்களை அடையாளம் கண்டு ஜூன் 15க்குள் அவர்களை வாக்காளராக பதிவு செய்வதற்கான நடவடிக்கையில் மஇகா இறங்கி இருப்பதாக சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணியம் கூறினார். எத்தனை உறுப்பினர்கள் வாக்காளராக பதிந்து கொண்டுள்ளனர் என்ற விவரத்தை நான் தினசரி பெற்று வருகிறேன். இந்த நடவடிக்கை ஜூன் 15 வரை தொடரும் என்பதால், விவரங்களை இப்போது என்னால் வெளியிட முடியாது என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்