img
img

ஸாஹிர் நாயக்கை வளைக்க இந்திய அரசு முயற்சிக்கிறது.
வெள்ளி 19 மே 2017 13:05:38

img

சர்ச்சைக்குரிய சமய பிரச்சாரர் ஸாஹிர் நாயக்கை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வருவ தற்கு ஏதுவாக பன்னாட்டு போலீஸ் பிரிவான இண்டர் போல்-சிறப்பு அறிக்கையை இந்திய அரசுக்கு அளிக்க இருப்பதாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட நபருக்கு பொது அமைதியும் சமய நல்லிணக்கமும் நிலவும் இந்த நாட்டில் அடைக்கலம் தருவது, மலேசியாவின் இறையாண்மைக்கும் பாது காப்பிற்கும் மிரட்டல் என்பதை தொடக்கத்தில் இருந்தே ஹிண்ட் ராப் கட்சி சார்பில் எழுப்பப்பட்ட குரல் முற்றிலும் உண்மை என்பது தற்பொழுது நிரூபணம் ஆகிறது என்று இதன் தொடர்பில் வெளி யிட்ட அறிக்கையில் அதன் தலைவர் பொன்.வேத மூர்த்தி தெரிவித்துள் ளார். ஸாஹிர் நாயக் இந்தி யாவில் இருந்து கொண்டு பன்னாட்டு தீவிரவாத நடவடிக்கைக்கு தூபம் போட்டது டன், நிதி முறைகேட்டிலும் ஈடுபட்டதாக அவர் தேடப்படும் நபராக ஏற்கெனவே அறிவிக்கப்பட் டதையும் இந்த உலகிற்கு முதலில் எடுத்துச் சொன்னதும் ஹிண் ட்ராஃப் இயக்கம்தான், அத்துடன், வங் காள தேச தலைநகரம் டாக்கா விற்கு அருகில் ஒரு தங்கும் விடுதியில் இடம் பெற்ற தீவிரவாத நடவடிக்கை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள், தாங்கள் இவ்வாறு செயல்பட்டதற்கு ஸாஹிர் நாயக்கின் பிரச்சாரம்தான் காரணம் என்று போலீஸ் விசாரணையின்போது அப்பட்ட மாகத் தெரி வித்தனர். இப்படிப்பட்ட நிலையில் மலேசியா வில் நிரந்தர வசிப் பிடத் தகுதியை அளிக்கும் சிவப்பு அடையாள அட்டை, ஸாஹிர் நாயக்கிற்கு அளிக்கப்பட் டதன் தொடர்பில் தொடக்கத்தில் இருந்தே குரலெழுப்பி வந்த ஹிண்ட்ராப் கட்சிக்கு பதில் சொல்லாமல் மௌனம் காத்து வந்த மலேசிய அரசு, மெல்ல இதை ஒத்துக் கொண்டதுடன் அல்லாமல், ஸாகிர் நாயக்கை இந் திய அரசு கைது செய்ய முயன் றால் அதற்கு மலேசிய அரசு குறுக்கே நிற்காது என்றும் அண்மையில் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத் தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி செய்தி யாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதன்பிறகு மஇகா உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளுடன் ஒரு சில சமய - சமூக இயக்கங்களும் அண்மைக் காலமாக அறிக்கை வெளியிட்டு வருவதை மலேசிய இந்திய சமூகம் கவனித்து வருகிறது. எது எவ்வாறாயினும் இந் திய அரசு தற்பொழுது ஸாகிர் நாயக்கை இண்டர்போல் போலீசார் மூலம் வளைக்க முற்பட்டுள்ள நிலையில், மலேசிய அரசின் நிலை இடர்பாட்டிற்கு ஆளாகியு ள்ளது என்று ஹிண்ட்ராப் தலைவர் பொன் வேதமூர்த்தி ஓர் அறிக் கையில் தெரிவித்துள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img