கிள்ளான், மே 19- இழப்பீடு கிடைக்கும்வரை மேம் பாட்டு நிறுவனம் இங்கு எந்த வேலையையும் தொடங்கக்கூடாது, என்ற எச்சரிக்கையுடன் எதிர்ப்பு தெரிவித்த ஜோ ஹான் செத்தியா விவசாயிகள் நேற்று காலை மூன்றாவது முறையாக மறியலில் ஈடுபட்டனர். கடந்த 30 வருடங்களாக நிலத்தை உழுது பயிரிட்டு விவசாயம் செய்து வந்த 22 பேரின் நிலத்தை எம்ஆர்டி ஓடுதளப் பாதை நிர்மாணிப் புக்காக விட்டுக் கொடுக்கும்படி நிர்ப்பந்தம் செய்து வந்த பிரசாரானா மேம்பாட்டு நிறுவனத் தரப்பினர் நேற்று காலை குத்தகையாளர்கள், மண்வாரி இயந் திரங்களுடன் அங்கு வந்து வேலையைத் தொடங்கினர். இருப்பினும் இத்தகவலைக் கேள்விப் பட்ட விவசாயிகள் அப்பகுதிக்கு விரைந்து வந்து குத்தகையாளர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறும் படி எச்சரித்து விரட்டியடிக்கத் தொடங்கியதுடன் வேலையைத் தற்காலிகமாக நிறுத்தும்படி பணித்தனர். இதன் தொடர்பில், குத்தகைப் பணியாளரகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நில மேம்பாட்டு நடவடிக்கையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சிலாங்கூர் அரசாங்கம் எங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அது வரை சம்பந்தப்பட்ட விவசாய நிலத்தில் எந்த மேம்பாட்டு வேலையும் இடம்பெறுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம், என்று அவர்கள் முழக்கமிட்டனர். மாநில மந்திரிபெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி எங்கள் பிரச்சினைக்கு செவி சாய்த்து உதவி நல்க வேண்டும். இங்கு வந்து எங்கள் நிலை மையைப் பாருங்கள், என்று பலமுறை கடித வாயிலாகத் தெரியப்படுத்தி விட்டோம். மாநில விவசாயத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் உட்பட கோத் தாராஜா தொகுதியை உள்ளடக்கிய இப்பகு தியின் சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி சுஹாய்மி, இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சித்திமரியா மாமுட் எனப் பலர் பதவி வகித்திருந்தும் இப்பகுதி வாக்காளரகளாகிய எங்களை இதுவரை யாரும் கண்டு கொள்ளவுமில்லை, பதில் கடிதமும் அனுப் பியதில்லை, என்று கூறிய சம்பந்தப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நோர்டின் ஹாசான், துணைத் தலைவர் பி.டி.சிவகாந்தன், செயலாளர் ஹாய்டின் மாரிஃவ் உள்ளிட்ட பாதிக்கப் பட்ட விவசாயிகள் அனைவரும் மாநில அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு குறித்து கடிந்து கொண்டனர். இதன் தொடர்பில் போலீஸ் புகார் செய்த சம்பந்தப்பட்ட விவசாயிகள், அப்பகுதியின் நுழைவாயிலில் யாரும் உட்பிரவேசிக்கத் தடை செய்யும் வகையில் எச்சரிக்கை அரண் அமைத் தனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தும் வகையில் மாநில பாரிசான் தலை வர் டான் ஸ்ரீ நோ ஒமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அம்மறியலின் போது அங்கு வந்து விவசாயிகளைச் சந்தித்த கோத்தாராஜா மஇகா தலை வர் டத்தோ ஆர்.எஸ். மணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்