கோலாலம்பூர் பிரபல எண் கணித நிபுணரிடம் மாது ஒருவர் ஏறத் தாழ இரண்டு லட்சம் வெள்ளியினை பறி கொடுத்து விட்டு பரிதவிக்கிறார். வயதான காலத்தில் இந்த தனித்து வாழும் தாய்மார் தனக்கு நேர்ந்துள்ள இக்கட்டான நிலையினை நண்பன் தீர்வை நோக்கி பகுதியில் வேதனையோடு விவரிக்கிறார். அரும்பாடு பட்டு சேர்த்து வைத்த பணம் எல்லாம் இப்படி வீணாக அடுத்தவர் கையில் சிக்கிக் கொண்டு விட்டதே என்று 69 வயது ருக்குமணி புலம்புகிறார். தற்போது நான் வேதனையின் விளிம்பில் இருக்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. பாண்டான் இண்டா போலீஸ் நிலையத்தில் நீண்டதொரு புகார் கொடுத்துள்ளேன். என் தொடர்பு எண் 016-6888869. சம்பந்தப்பட்ட அந்த எண் கணித நிபு ணர் தாம் ஒரு வர்த்தகத்தை துவங்கவிருப்பதாக என்னிடம் தெரிவித்தார். அதற்காக 50 ஆயிரம் வெள்ளியினை அவரின் கணக்கில் 2012ஆம் ஆண்டு ஏப் ரல் மாதம் 23ஆம் தேதி சேர்த்தேன். இது போதாது, இன்னும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வேண்டும் என்றார். என் இதர இரண்டு நண்பர்களின் உதவி யினை நாடினேன். இந்த ருக்குமணியின் பரிந்துரையின் பேரில் மேலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி இந்த எண் கணித நிபுணரிடம் வழங்கப்பட்டது. எப்படியோ இவர் என்னிடம் பிறகு 6 ஆயிரம் வெள்ளியினை திருப்பித் தந்தார்.எஞ்சிய தொகையினை எப்போது திருப்பி செலுத்தப் போகிறார் என்று கேட்டு நான் நாள்தோறும் நடையா நடக்காத நாட்களே இல்லை.எங்களின் பணம் எங்கே என்று இரண்டு நண்பர்கள் நாள்தோறும் நச்சரித்து வந்தனர். ஒரே மன உளைச்சல். வயதான காலத்தில் இப்படியொரு நரக வேதனையா? மனிதர் மாயமாக மறைந்து விட்டார் போலும். இவரின் வீட்டு முகவரி மற் றும் தொலைபேசி எண்ணையும் மாற்றி விட்டார் போல் தெரிகிறது. இந்த மோசடி பேர்வழியால் இன்னும் பலர் மோசம் போய்விட்டார்கள் என்று என் னிடம் தெரிவிக்கப்பட்டது. இழந்த பணத்தை மீட்டுத் தருவதற்கு நல்லுள்ளம் கொண்டோர் இந்த ஏழை தனித்து வாழும் தாய்க்கு தகவல் தந்து உதவவேண்டும்.இவரைப்பற்றி தகவல் தேவை.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்