img
img

பிரதமர் முன்னிலையில்பாய்ந்து சென்று அறைவதா?
வெள்ளி 19 மே 2017 11:32:49

img

டிஎன்50 மீதிலான கலந்துரையாடலின்போது தனது கண் எதிரே இரு கலைஞர்கள் மத்தியில் கைகலப்பு நேர்ந்த போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மௌனம் சாதித்திருப்பது குறித்து பி.கே.ஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆவேசம் அடைந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தேதி பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்தில் நடைபெற்ற டிஎன்50 மீதிலான கலந்துரையாடலில் திரைப்பட இயக்குநர் டேவிட் தியோ தாக்கப்பட் டதைப் பற்றி நான் கேள்வி எழுப்புகிறேன். இந்த வெட்கக்கேடான, மூர்க்கத்தனமான செயல் பிரதமரின் கண் எதிரே நிகழ்ந்துள்ளது. கையில் ஒலிவாங்கியுடன் (மைக்ரோஃபோன்) பிரதமரிடம் கேள்வி கேட்க முற்பட்ட போது டேவிட் தியோ தாக்கப்பட்டார். நஜீப் இதனை பார்த்துக்கொண்டு மௌனம் சாதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் சுரேந்திரன் மேலும் கூறினார். நஜீப் துன் ரசாக் முன்னிலையில் பட இயக்குநர் டேவிட் தியோவைத் தாக்கியதற்காக நகைச்சுவைக் கலைஞர் சுலைமான் யாசின் வருத்தப்படவில்லை. தியோவுக்கு மரியாதை கற்றுத்தரத்தான் அப்படிச் செய்ததாக மாட் ஓவர் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அந்த நகைச் சுவைக் கலைஞர் சொன்னதாக மலாய் நாளேடான ஹரியான் மெட்ரோ கூறியது. அந்த கருத்தரங்கில் தியோ, பிரதமரையும் நிகழ்ச்சி நெறியாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த ரோஸ்யாம் நோரையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டாராம். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது மேடையை நோக்கிச் சென்ற தியோ அங்கு எல்லோருக்குமே சமவாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று நிகழ்ச்சி நெறியாளர் ரோஸ்யாமிடம் முறையிட்டிருக்கிறார். பிரதமரை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வதாக தியோவைக் கடிந்துகொண்ட ரோஸ் யாம் தொடர்ந்து தியோவுக்கும் அவருடைய கருத்தைச் சொல்ல அனுமதியும் கொடுத்தார். தியோ ஒரு கவிதை படிக்கத் தொடங்கினார். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. தியோவை நோக்கிச் சென்ற சுலைமான் ஓங்கி அவரை அறைந்தார். அறை தியோவின் இடது கையில் விழுந் தது. பதிலுக்கு தியோ,சுலைமானை எட்டி உதைத்தார். சிறிது நேரம் இருவருக்குமிடையில் தள்ளுமுள்ளு நிகழ்ந்தது. உடனே பாதுகாவலர்கள் இடை யில் புகுந்து இருவரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் நிகழ்வு சுமுகமாக தொடர்ந்தது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்த பிரதமர் நஜீப், அதன்பின்னர் தியோ,சுலைமான் ஆகிய இருவரையும் அரங்குக்கு அழைத்து வரச் சொல்லி இருவரையும் கைகுலுக்க வைத்து சமாதானப்படுத்தி வைத்தார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சிடைந்ததாக கூறிய தியோ, சுலைமானைத் தமக்குத் தெரியாது என்றார். திடீரென ஓடிவந்து அறைந்தார். நான் ரோஸ்யாமிடம் என்ன கேட்டேன்,முன்வரிசையில் இருப்பவர்களை மட்டுமே பேச அழைக்காமல் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்றேன்.நானும் பிரதமரிடம் சில கேள்விகள் கேட்க விரும்பினேன் என தியோ கூறியதாக நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித் திருந்தது. தியோ, இவ்விவகாரத்தை முடிந்து போன ஒன்றாகத்தான் நினைக்கிறார்.தம்மைத் தாக்கியவர் மீது வழக்கு தொடுக்கும் எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img