பெட்டாலிங் ஜெயா பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பும் இவருக்கு அடுத்தபடியாக பிரதமராக வரப் போகிறவர்களும் சரி தங்களின் சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிவிக்க வேண்டும். டிரான்ஸ்பேரன்சி இண்டர்நேஷனல் மலேசியா இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளது. அண்மையில் ஊழலில் சம்பந்தப்பட்ட அநேக அரசு அதிகாரிகளை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பார்க்கும் போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இந்த விஷயத்தில் ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று டிரான்ஸ்பேரன்சி இண்டர்நேஷனல் மலேசியாவின் தலைவர் அக்பார் சர்தார் வலியுறுத்தினார். நிர்வாகம், சட்டத்துறை, நீதித்துறை, அரசுத்துறை ஆகியவற்றை சார்ந்தவர்கள் அனைவரும் சொத்து விவரங்களை பிரகடனம் செய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்கலாகாது. பிரதமர், துணைப்பிரதமர், அமைச்சர்கள், மந்திரி புசார்கள், முதலமைச்சர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், நீதிபதிகள், சட்டத்துறைத் தலைவர், தேசிய போலீஸ் படைத் தலைவர், மலேசிய ஆயுதப்படையின் தளபதி ஆகியோர் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும். இவர்கள் எல்லாம் உயர் பதவிகளை வகிக்கிறார்கள். பொது நலனை முன்னிட்டு இவர்களின் சொத்து விவரங்கள் எல்லாம் கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்