460 கிராம் ஹெரோயின் வகையிலான போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை போலீ சார் கைது செய்தனர். அதிகாலை 4 மணியளவில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது ஈப்போ, தாமான் சிலிபின் ரியாவில் உள்ள வீட்டோன்றில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது 460 கிராம் போதைப் பொருள் பொட்டலங்கள் வீட்டின் வரவேற்பரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால், கூலி வேலைச் செய்யும் 51 வயதான ஆடவர் உட்பட அவரின் மனைவி, நான்கு பிள்ளை, ஒரு மருமகன் மற்றும் இரு மருமகள் என மொத்தம் 9 பேரைப் போலீசார் கைதுச் செய்தனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் நேற்று நண்பகல் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 28 வயதான மகன், உட்பட இருவரை மே 23ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மற்ற அறுவரையும் வரும் வியாழக்கிழமை வரை தடுப்பு காவலில் வைத்து வாக்குமூலம் பெறும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்