img
img

முதல் சவாலை சந்திக்கிறார் ராம்குமார்
வெள்ளி 15 ஜூலை 2016 11:14:49

img

டேவிஸ் கோப்பையின் ஆசிய-ஓசியானியா குரூப்-1 டென்னிஸ் போட்டி பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இன்று தொடங்குகிறது. இதில், இந்தியா, கொரியா அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், யுகி பாம்பரி இருவரும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால், சென்னையை சேர்ந்த ராம்குமார் ராமநாதனுக்கு முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று நடக்கும் முதல் ஒற்றையர் போட்டியில் ராம்குமார், கொரியாவின் சியோங் சன் ஹாங்கை சந்திக்கிறார். 3 நாட்கள் நடக்கும் இப்போட்டியின் 2வது ஒற்றையர் சவாலில் மைனினி-யாங் கியூ லிம் மோதுகின்றனர். இரட்டையர் போட்டியில் லியாண்டர் பயஸ், போபண்ணா ஜோடி, கொரியாவின் ஹாங் சங், யன்சியாங் சங்கை எதிர்கொள்கிறது. ரியோ ஒலிம்பிக்கில் பயஸ், போபண்ணா ஜோடி களமிறங்க உள்ளது. முன்னதாக மைனினியுடனே பங்கேற்க விரும்புவதாக போபண்ணா கூறியிருந்தார். ஆனால், பயசுடன் இணைந்து விளையாட அகில இந்திய டென்னிஸ் சங்கம் அவரை நிர்பந்தித்தது. இந்த பிரச்னையில் பயஸ்-போபண்ணா இடையே நிலவிவரும் நெருக்கடி தீர இப்போட்டி ஒரு வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார், மைனினி கொரியா வீரர்களை எதிர்த்து விளையாடுவர். பலமில்லாத கொரியாவை இந்தியா எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணி உலக குரூப் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img