மலாக்கா சூதாட்டம், உடம்பு பிடி மையங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக பணம் பெற்ற 2 ஓசிபிடி உட்பட அறுவரை தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. மலாக்கா வட்டாரத்தில் சூதாட் டம், உடம்பு பிடி மையங்கள் எந்தவொரு பிரச்சினையும் இன்றி செயல்படுவதற்கு இம்மூன்று அதிகாரி களும் பணம் பெற்றுள்ளனர். துணை சூப்ரிண்டெண்டன் (ஓசிபிடி) பதவி கொண்ட இருவரும், இன்ஸ்பெக்டர் பதவி கொண்ட ஒருவரும் இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட் டுள்ளனர். இம்மூன்று போலீஸ் அதிகாரிகளுடன் மேலும் மூவரையும் ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளனர். கைது செய் யப்பட்ட ஆறு பேரும் 31 வயதில் இருந்து 50 வயதுக்கு உட்பட்ட வர்களாவர். கைது செய்யப்பட்ட அறுவரும் நேற்று புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப் பட்டது. மாஜிஸ்திரேட் ஷாபுவான் அஷார் தலைமையில் இவ்வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.விசாரணைக்கு உதவும் வகையில் இந்த அறுவரும் ஆறு நாட் களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்படுவார்கள் என்று மாஜிஸ்திரேட் உத்தரவு வழங் கினார். இச்சம்பவத்தில் மேலும் பல போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்பு காவல் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்