ஜொகூர்பாரு மலேசிய இளம் பாடகர்களை தரமிக்க பாடகர்களாக உருவாக்கி உலக அரங்கில் கொண்டு சேர்ப்பதே தனது குறிக்கோள் என இசையமைப்பாளர் எஸ்.சேது ராஜா கூறுகிறார். ஜொகூர் பாரு யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியில் தனது மை ஸ்கூடார் மூலம் மலைநாட்டில் மயக்கும் குரலைத் தேடி எனும் கருவில் 10, 12, 13, 17, 18 வய துக்கும் மேற்பட்டவர்களுக்கான மூன்று பிரிவுகளாக சிறந்த பாடல் கலைஞர்களை தேர்வு செய்யும் நோக்கில் நடைபெற்ற இளம் பாடகர்கள் தேர்வின் போது கருத்துரைத்த எஸ்.சேதுராஜா நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற குரல் தேர்வு நடத்தி சிறந்த கலைஞர்களைத் தேர்வு செய்ய விருப்பதாகக் குறிப்பிட்டார். பல திறன் பெற்ற கலைஞர்கள் நம்மிடம் மறைந்து கிடப்பதாக குறிப்பிட்ட எஸ்.சேதுராஜா, அவர்களை வெளியே கொண்டு வந்து அறிமுகப்படுத்துவதே தனது தலையாய நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.இந்த முயற்சியின் மூலம் மலைநாட்டின் பாடகர்களை உலக அரங்கில் கொண்டு போய் சேர்க்க முடி யும் என திடமாக நம்புவதாக குறிப்பிட்ட அவர் தமிழ்நாட்டின் இசையமைப்பாளர் பாடகர் மோகன் வித்யாவைக் கொண்டு சிறந்த குரல் வளம் கொண்ட கலைஞர்களை தேர்வு செய்வதுடன் அவர்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு சென்று பிரபலப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகக் குறிப் பிட்டார். ஜொகூர்பாரு, கோலால ம்பூர், பினாங்கு ஆகிய இடங்களில் நடைபெற்ற குரல் தேர்வு வழி பலர் தேர்வு பெற்ற அடுத்த சுற்றுக்கு தயாராகி விட்ட வேளையில் இனி கெடா, மலாக்கா மற்றும் ஈப்போ ஆகிய இடங்களில் குரல் தேர்வுகள் நடைபெறவிருப்பதாகவும் தெரிவித்தார்.குரல் தேர்வில் பங் கெடுக்க ஆர்வம் கொண்டவர்கள் 017-4573839 எனும் எண்ணில் எஸ்.சேதுராஜாவுடன் தொடர்பு கொள்ளவும்.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்